பட்டா நிலத்தை அபகரிக்க திட்டம்! புதைத்த உடல் மாயம்! திருவள்ளூர் ஆட்சியருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பட்டா நிலத்தை அபகரிக்கும் நோக்கில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வேறு இடத்திற்கு மாற்றக் கோரிய வழக்கில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், திருவள்ளுர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் கிராமத்த்தில் உள்ள தன்னுடைய பெயரிலும் தன் குடும்பத்தார் பெயரிலும் சொந்தமான நிலங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்நிலங்களை அபகரிக்க பட்டரைபெரும்புதூர் கிராமத்தை சேர்ந்த சிலர் முயற்சித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 9 ம் தேதி பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் காலமான கண்ணம்மாள் என்பவரின் உடலை, தங்கள் நிலத்திற்கு செல்லும் சாலையில் புதைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திருவள்ளுர் தாசில்தார், திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
தன் நிலத்திற்கு செல்லும் சாலையில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து இடுகாட்டில் புதைக்க உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயண பிரசாத், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications