தஞ்சையை போல் சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
சென்னை: தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் உள்ளது போல சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க கோரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி.கனகராஜ் தொடர்ந்த வழக்கில் வரும் 28ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சி கனகராஜ் கடந்த 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் 6 பொதுநல வழக்குகள் தனித்தனியாக தொடர்ந்திருந்தார்.

இந்த பொதுநல வழக்குகள் அனைத்தும் இன்று காலை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் நீதிபதி முகமது சபிக் ஆகியோர் அடங்கிய முதன்மை முன்பு விசாரணைக்கு வந்தது. தஞ்சையில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் இதே போல தலைநகரான சென்னையிலும் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர் கனகராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில் ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த மொழிக்கென தலைநகரில் தனியாக பல்கலைக்கழகம் உள்ளதாகவும் அது போன்ற நிலை தமிழகத்தில் இல்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி இது போன்று மாவட்டம் தோறும் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கேட்பீர்களா என வினா எழுப்பினர்.
அதற்கு மனுதாரர் தலைநகரான சென்னையில் மட்டும் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார் இதில் அடுத்த வழக்காக தமிழகத்தில் உள்ள 58 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது முகாமில் அடைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் எனவே உரிய வசதிகள் செய்து தரப்படுவதுடன் அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் கனகராஜ் வாதிட்டார்
இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை அடுத்து உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவை அறிவிப்புகளை தமிழில் வெளியிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மனுதாரர் கனகராஜ் தொடர்ந்த மற்றொரு வழக்கான தமிழ் மொழி வளர்ச்சி க்கு கூடுதலாக நிதி ஒதுக்ககோரிய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் இது போன்ற வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது என்றும் அதில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அந்த உத்தரவில் சமஸ்கிருதத்தை வளர்க்க 645 கோடி, தமிழ்மொழிக்கு 22 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்து உள்ளது என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் சுட்டி காட்டினார்.
அதற்கு மனுதாரரான வழக்கறிஞர் கனகராஜ் தமிழ் வளர்ச்சி விவகாரத்தில் மாநில அரசு அலர்ஜி போக்காக உள்ளது என்றும் இதனால் மத்திய அரசு உரிய நிதி ஒதுக்கவில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தமிழ் வளர்ச்சி தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications