சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியிருப்பு உத்தரவை ரத்து செய்யக் கூடாது.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டடத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக வீடுகள் இல்லாதவர்களுக்கு ஒதுக்கிய குடியிருப்பு உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வா தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கேசவப்பிள்ளை பார்க் பகுதியில் கடந்த 1970-ம் ஆண்டு குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டது.

Chennai HC orders Tamilnadu government on Slum Clearance board

40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் கட்டிடம் என்பதால் கடந்த 2018 ம் ஆண்டு இடிக்கப்பட்டது. ஓராண்டுக்குள் வீடு கட்டித் தரப்படும் என்ற அதிகாரிகளால் உறுதியளித்தும், வீடுகள் கட்டி தராததால் மீண்டும் சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியருப்பை பயனாளிகளுக்கு வழங்காமல் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் இடமாக பயன்படுத்த உள்ளதாக பயனாளிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

கொரோனா நோயாளிகளிக்கு போதுமான மருத்துவமனை மற்றும் படுக்கை வசதிகள் செய உத கொடுக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைக்கு மாறாக குடியிருப்புகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட உள்ளது.

வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!வடதமிழகம்: 3 நாட்களுக்கு காலை 11.30- 3.30 வரை பொதுவெளியில் வேலை செய்ய கூடாது- வெயில் வதைக்குமாம்!

அதனால், இடைக்கால உத்தரவாக குடியிருப்புகளை சிகிச்சை மையமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், வீடுகள் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடுகளை வழங்க குடிசை மாற்று வாரியத்திக்கு உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், பி.டி ஆஷா அமர்வு, கொரோனா சிறப்பு வார்டு அமைப்பதற்காக வீடுகள் ஒதுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும், சாலைகளில் வசிக்கும் மக்களை நேரில் ஆய்வு செய்து அறிக்கை ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

English summary
Chennai HC orders Tamilnadu government on Slum Clearance board
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X