Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மீண்டும் ஹைகோர்ட் கதவை தட்டும் மன்சூர் அலிகான்! ரூ 1 லட்சம் தடைவிதிக்க நீதிபதி மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரிஷா விவகாரத்தில் ரூ 1 லட்சம் அபராதம் விதித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மறுஆய்வு மனு வரும் பிப்ரவரி 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Chennai HC refuses to ban Rs 1 lakh fine amount for Mansoor Ali khan

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த தொகையை செலுத்த கால நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர்.

அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்த நிலையில் தமக்கு விதித்த அபராதத்தை மறுஆய்வு செய்யக் கோரி மன்சூர் அலிகான் வழக்குத் தொடர்ந்தார். அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தனி நீதிபதி விதித்த அபராதத்தை ரத்து செய்ய முடியாது. தேவைப்பட்டால் தனி நீதிபதியிடமே முறையிடுங்கள் என கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 13-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+