அதிமுக பொதுக்குழு: சூடாக வாதங்களை அடுக்கிய எடப்பாடி தரப்பு.. விசாரணையை மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்!
சென்னை : ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று மீண்டும் சூடாக விசாரணை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மாற்ற முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதம் செய்தார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதன்படி, ஒரு மாத இடைவெளிக்கு பின் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் விசாரணை நடைபெற்றது.

அப்போது, எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. அதில், கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களிடம் கேட்டு எடுக்க முடியாது. அனைத்து நடவடிக்கைளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும், கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். திருத்துவதற்கும், தளர்த்துவதற்கும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் உறுப்பினர் முதல் நிர்வாகிகள் வரை கட்சி விதிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் தான் ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை என அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.
விசாரணை தொடங்கியதும், எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் விஜய்நாராயண் வாதங்களை முன்வைத்து வருகிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது அதிமுக பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை வகுத்தார். அந்த விதியை மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார்.
ஒருமுறை எழுதிவிட்டால் கட்சியின் அடிப்படை விதியை மாற்ற முடியாது, அரசியல் கட்சிகளுக்கு சித்தாந்தம் இருக்குமே தவிர அடிப்படை கட்டமைப்பு என்ற ஒன்று கிடையாது. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் வகையில் செயல்படுவதாக ஓ.பி.எஸ். குற்றம்சாட்டுவது தவறு என்று விஜய்நாராயண் வாதங்களை வைத்துள்ளார்.

மேலும், "அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் தான் நிறைவேற்றப்பட்டது. கட்சி அலுவலகத்தில் பன்னீர்செல்வம் நுழைந்ததை அத்துமீறல் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என வாதம் வைத்தார்.
இதையடுத்து, அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு (ஜூன்12) ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
-
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
ரூ.8000 கூப்பன் கொடுத்து.. வாக்கு கேட்ட திமுக வேட்பாளர் செந்தில்! கொந்தளிக்கும் அதிமுக -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications