சட்டசபைக்குள் குட்கா.. கடைசி நேர ட்விஸ்ட்.. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாதம் வைக்க சென்னை ஐகோர்ட் அனுமதி!
சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்ற விவகாரத்தில், வழக்கு தீர்ப்புக்கு தயாராக இருந்த நிலையில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 2017 ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அப்போதைய உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.
இந்த நோட்டீசை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல் ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, கடந்த திங்கள் கிழமை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.
ஆனால் மேல் முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், கு.க.செல்வம் தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். கு.க.செல்வம் காலமாகி விட்டதாகவும் நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், காலமாகி விட்ட கு.க.செல்வத்துக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 29 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications