மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்.. தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: பேருந்து நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக கழிப்பிடம் அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட கோரி, ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்களை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படிப்படியாக பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்படும் எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைக்கு பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து அரசின் விளக்கத்தை பெற்று தெரிவிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications