என்ன இதெல்லாம்.. உங்களுக்கு “அங்க” என்ன வேலை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி - வெலவெலத்த ஓபிஎஸ் தரப்பு
சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது கூட்டத்துக்கு செல்லாமல் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்றது ஏன்? அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வெடித்தபோது காவல்துறை ஏன் யாரையும் கைது செய்யவில்லை? எனவும் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அலுவலகத்துக்கு சீல்
பொதுக்குழுவின்போது அதிமுக தலைமையகத்தில் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதால் கட்சித் தலைமையகத்தை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தலைமையகத்துக்குள் செல்ல முடியவில்லை. 25 ஆம் தேதி இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் இதுதொடர்பாக காவல்துறை வழக்கும் பதிவு செய்து உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கேள்வி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், காவல்துறை தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சதீஷ் குமார், "அதிமுக பொதுக்குழு நடைபெற்றபோது கூட்டத்துக்கு செல்லாமல் கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்றது ஏன்? அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வெடித்தபோது காவல்துறை ஏன் யாரையும் கைது செய்யவில்லை?" என்று கேள்வி எழுப்பினார். மேலும் வன்முறை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமர்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட அவர், நாளை விசாரணையை ஒத்திவைத்தார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர்.. 3.5 மணி நேரத்தில் 5.63 லட்சம் பேர்! அடுத்த விஜய் மொமென்ட்? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications