பிரபல நகைக் கடைக்கு எதிராக நடிகை தமன்னா வழக்கு! பதிலளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பிரபல நகை கடை நிறுவனத்திற்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதில் அளிக்க அந்த நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்த நிலையில் அந்த விளம்பரத்தை ஒப்பந்தம் முடிந்த பிறகும் பயன்படுத்துவதை எதிர்த்து நடிகை வழக்குத் தொடர்ந்தார்.
பிரபல நகைக்கடை நிறுவனமான அட்டிகா கோல்ட் நிறுவனத்திற்கு விளம்பர மாடலாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் சம்பந்தப்பட்ட தனது விளம்பரத்தை அந்த நிறுவனம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் அட்டிகா கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நீதிமன்ற தடை உத்தரவிற்கு பிறகும் தனது விளம்பரத்தை அட்டிகா கோல்டு நிறுவனம் பயன்படுத்துவதாக கூறி தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நகைக்கடை நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார், தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும் ஆனால் வாட்ஸ், அப் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் எங்களின் பழைய விளம்பரங்களை தனிநபர் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிட்டார்.
இதனை அடுத்து மனுவிற்கு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதேபோல் பவர் சோப் நிறுவனத்திற்கு மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும் எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகை தமன்னா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதரார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications