“பிராமின்ஸ் ஒன்லி” வெளிய போ! சென்னையில யாரு “சாதி” பாக்குறா? வீடு தேடிய உதவி இயக்குநரின் “துயரம்”
சென்னை: சங்கரன்கோயில் அருகே ஒரு கடையில் பட்டியலின சிறுவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்து தீண்டாமையில் ஈடுபட்டது பெரும் விவாதப் பொருளான நிலையில், சென்னையில் காலம் காலமாக குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும் என அறிவிப்பதையும் தடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
இது தொடர்பாக பேஸ்புக்கில், உதவி இயக்குநர் ஷாஜன், தனக்கு நேர்ந்த துயரத்தை அனுபவத்தை பதிவிட்டு இருக்கிறார். அதில், "சமீபத்துல வீடு தேடி சென்னைல அலஞ்சுட்டு இருந்தேன், அப்போ திருவல்லிக்கேணில இருக்க ஒரு வீட்டுக்கு வெளிய Tolet board பாத்துட்டு உள்ள போனேன்.
வரிசையா வீடு இருந்துச்சு. எந்த வீடு வாடகைக்குன்னு தெரியல. அந்த நேரம், ஒரு ஆள் சட்ட போடாம வேஷ்டியோட வந்து யார் வேணும்னு வேகமா வெளிய தொறத்துற மாறி கேள்வி கேட்டாரு. நான் tolet board பார்த்து வந்தேன்னு சொல்ல அடுத்த கேள்வி " Brahmin ஆ நீங்க" ன்றது தான்.

பிராமின்ஸ் ஒன்லி
இல்லன்னு சொல்லவும், வெளிய கையோட அழைச்சிட்டு வந்து அந்த tolet boardஅ காட்டி படின்னு (ஒருமைல பேசுறது சாதாரணமாவே வந்துருது) சொன்னாரு. Tolet போர்ட்க்கு கீழ "Brahmins only" னு பேனாவால எழுதி இருந்துச்சு. "படிச்சுட்டீயா ..தெரிஞ்சுதா"ன்னு அப்டி ஒரு சிரிப்பு அந்த மனுஷனுக்கு; எதையோ சாதிச்ச மாறியும், எனக்கு பாடம் எடுத்த மாறியும். கடந்த ரெண்டு வாரமா இது பெரும்பாலான இடங்கள்ல சுத்தி சுத்தி எனக்கு நடந்துட்டு இருந்துச்சு.

வளரும் தீண்டாமை
நாகரீகம் வளர்ச்சி அடைந்த நகரத்தில் தீண்டாமையின் அளவீடுகளும் அவ்வாறே வளர்ந்து வந்துள்ளது என்பதே நிதர்சனம் ஆகிறது. சமீபத்தில் தமிழகத்தில் ஒரு பெட்டி கடையில் சிறுவர்கள் பண்டம் கேட்டதற்கு நீங்க வேற தெரு ஆட்க உங்களுக்கு தரக்கூடாது ஊர் கட்டுப்பாடு என்று கூறி தீண்டாமை செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டது அந்த கடை சீல் வைக்கப்பட்டது.

இரண்டும் ஒன்றே
மேற்கண்ட நிகழ்வில் நடவடிக்கை எடுக்கப்பட்டது மிகவும் பாராட்டக்கூடியது. அதுபோலவே தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் Tolet போர்டுகளிலும் மற்றும் Gated community apartment பிராமின்களுக்கு மட்டும் (Brahmin Only ) என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கூறிய இரு நிகழ்விற்கும் எந்த அளவிலும் பாகுபாடு கிடையாது. இரண்டுமே தீண்டாமையின் வெவ்வேறு வடிவங்கள் தான்.

அனைவரையும் தண்டிக்கனும்
இருப்பினும் வர்க்க நிலையில் கீழே உள்ளவர்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்படுவது போல மேலே இருப்பவர்கள் தண்டிக்கப்படுவது கிடையாது. ஆகவே இவையும் தீண்டாமைக்குரிய குற்றங்களாக கருதப்பட வேண்டும். சாதி வெறியர்களின் கடைகள் சீல் வைக்கப்படுவது போல அதை வளர்த்து கொண்டு இருப்பவர்களின் குற்றங்களுக்கும் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications