20 மாவட்டங்களில் பல்லை காட்டிய வடகிழக்கு பருவமழை.. தமிழ்நாட்டில் இன்னும் முடியலையா.. வானிலை அப்டேட்
சென்னை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் இரண்டு வரலாற்று பேரிடர்கள் வந்தும் பெரிய அளவில் மழை இல்லை என்பதே உண்மை. ஒட்டுமொத்தமாக வழக்கத்தை விட 4 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ள போதிலும், 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாக மழை பெய்திருப்பது தெரியவந்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பரில் முடியும் இந்தத காலக்கட்டத்தில் பொதுவாக சென்னை முதல் காரைக்கால் வரை உள்ள பகுதிகளில் அதிகமான மழை மற்றும் புயல் போன்ற சம்பவங்கள் நடக்கும். குறிப்பாக ஒவ்வொரு ஐந்தாண்டிற்குள் ஒரு பெரிய பேய் மழை அல்லது புயல் கண்டிப்பாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு 10 வருடத்திற்கு ஒரு முறை வரலாறு காணாத மழையும் பாதிப்பும் இருக்கிறது.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு இரு பெரும் பேரிடர்களை தமிழகம் சந்தித்துள்ளது. கடந்த டிச.3, 4 தேதிகளில் இடைவிடாது பெய்த மழையால் சென்னையில் மிகப்பெரிய மழை பெய்துள்ளது. ஆவடியில் தலா 28 செமீ (மொத்தம் 56 செமீ), நுங்கம்பாக்கத்தில் 23, 24 செமீ (மொத்தம் 47 செமீ), மீனம்பாக்கத்தில் 25, 18 செமீ (மொத்தம் 43 செமீ), தாம்பரத்தில் 17, 23 செமீ (மொத்தம் 40 செமீ), செம்பரம்பாக்கத்தில் 16, 20 செமீ (மொத்தம் 36 செமீ) பதிவாகி உள்ளது. டிசம்பர் 4-ம் தேதி அதிகபட்சமாக பூந்தமல்லியில் 34 செமீ மழை பெய்திருக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழை பாதிப்பில் மீண்ட அடுத்த 15 நாட்களில் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது.ஒரே நாளில் 100 செமீ என்கிற அளவிற்கு மழை பெய்தது. தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17-ம்தேதி கொட்டி தீர்த்த கனமழையால் 39 இடங்களில் அதிகனமழையும், 33 இடங்களில் மிக கனமழையும், 12 இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செமீ, திருச்செந்தூரில் 69 செமீ, வைகுண்டத்தில் 62 செமீ, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் 61 செமீ, மாஞ்சோலையில் 55 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 53 செமீ, தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் 51 செமீ, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 செமீ மழை பெய்துள்ளது.
அதேநேரம் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 46 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் வழக்கமாக 44 செமீ மழை கிடைக்கும். இந்த முறை வழக்கத்தைவிட 4 சதவீதம் அதிகமாக மழை கிடைத்திருக்கிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 158 சதவீதம் (133 செமீ), கன்னியாகுமரி மாவட்டத்தில் 97 சதவீதம் (105 செமீ), தூத்துக்குடி மாவட்டத்தில் 84 சதவீதம் (84 செமீ) மழை பதிவாகி இருக்கிறது.
கள்ளக்குறிச்சியில் 55 சதவீதம் குறைவாக 20 செமீ, கிருஷ்ணகிரியில் 50 சதவீதம் குறைவாக 14 செமீ, பெரம்பரலூரில் 46 சதவீதம் குறைவாக 23 செமீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிகமாகவும், நீலகிரி மாவட்டத்தில் வழக்கமான அளவும், 20 மாவட்டங்களில் வழக்கத்தைவிட குறைவாகவும் மழை பெய்திருக்கிறது. புதுச்சேரியில் 27 சதவீதம் குறைவாகவும், காரைக்காலில் 7 சதவீதம் அதிகமாகவும் மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நிலவுகிறது. இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக் கடலின் மத்தியப் பகுதிகளில் நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் வரும் 6-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்" என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications