காளிகாம்பாள் கோயில் விவகாரம்: கார்த்திக் முனுசாமி விருந்தாக்க நினைத்த விஐபி யார்? ஆங்கர் தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காளிகாம்பாள் கோயில் பூசாரி கார்த்திக் முனுசாமி, தாலிக் கட்டிய தொகுப்பாளினியை எந்த விஐபிக்கு விருந்தாக்க முயற்சித்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு தொகுப்பாளினி மறுத்ததால் அந்த விஐபியும் அந்த பெண்ணை மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட செய்தியாளர்களிடம் கூறியிருந்ததாவது: என் வாழ்க்கையையே நாசமாக்கிய கார்த்திக்கிற்கு ஜாமீன் கொடுத்து விட்டனர். இது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. நான் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளேன். என்னிடம் ஆதாரங்கள் எல்லாம் இருக்கின்றன.

karthik munusamy kaligambal temple

என்னை கொல்வதற்காகவே கார்த்திக் சென்னையில் உள்ளார். ஏற்கெனவே என்னை கொல்ல சதி நடந்தது. எனக்கு யார் உதவி செய்தாலும் அவர்களை காளிகாம்பாள் கோயில் தலைமை குருக்கள் காளிதாஸ் மிரட்டி வருகிறார். நான் தனியாளாக போராடிக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு முறையான நீதி வேண்டும். போலீஸார் விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை. நான் மீடியாவில் இருப்பதால் சிறியதாக மாங்கல்யம் செய்து எனக்கு போட்டுவிட்டார். "இப்போது இதை போட்டுக்கோ பிறகு சரடில் போட்டுவிடுகிறேன்" என கார்த்திக் என்னிடம் சொன்னார்.

அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆகவில்லை என்பது எனக்கு கடந்த டிசம்பர் மாதம்தான் தெரியும். இதை நான் தட்டிக் கேட்ட போது " என் மனைவியை சமாதானப்படுத்தி உன்னை இரண்டாம் தாரமாக வாழ வைக்கிறேன். எனக்கு அதற்கு நேரம் வேண்டும். தற்போது நான் உன்னை திருமணம் செய்து கொண்டதால் முதலில் குலத்தெய்வம் கோயிலுக்கு செல்ல வேண்டும்" என கூறினார்.

அது போல் என்னை அழைத்துச் சென்று குலத்தெய்வம் கோயிலில் வைத்து என் நெற்றியில் குங்குமம் வைத்துவிட்டார். இதற்கு அங்கிருந்தவர்களே சாட்சி! நான் அவருடைய முதல் மனைவி, அவருடைய மகள் ஆகியோருடன் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு சென்றிருந்தோம். என் வாழ்க்கையே நாசமாக போனதால் வேறு வழியில்லாமல் முதல் மனைவியுடன் நான் சகஜமாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்கான விமான டிக்கெட் எல்லாவற்றையும் நான் வைத்திருக்கிறேன். கார்த்திக்கிற்கு தெரிந்த ஒரு பெண் , என்னிடம் வந்து, "கார்த்திக்கை விட்டுவிட்டு போய்விடு, உனக்கு விபச்சாரத் தொழில் செய்தால் நல்ல பணம் கிடைக்கும்" என்றார். ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் மகனுக்கு என்னை விருந்தாக்க கார்த்திக் முயற்சித்தார்.

நான் முடியாது என சொன்ன போது கார்த்திக் என்னை அடித்தார். அது போல் அந்த ஓய்வு பெற்ற நீதிபதியின் மகனும், "உன் விவகாரம் எல்லாம் எனக்கு தெரியும். ஒழுங்கா அட்ஜஸ்ட் செய்துகிட்டு இருந்தால் உனக்கு நல்லது, அதை விட்டுவிட்டு எங்கள் விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்துவிடுவோம்" என மிரட்டினார். என்னோட கோரிக்கை என்னவென்றால் கார்த்திக் என்னுடன் ஒழுங்காக வாழ வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னை திருமணம் செய்து கொண்டார். எனவே எனக்கு வாழ்க்கை வேண்டும் என அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

சென்னை காளிகாம்பாள் கோயிலில் பூசாரியாக இருந்த கார்த்திக் முனுசாமி என்பவர் தீர்த்தத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னுடன் உறவு கொண்டார் என்றும் என்னை சமாதானப்படுத்த என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டு தாலியும் கட்டியதாகவும் பிரபல டிவி சேனலின் தொகுப்பாளினி தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரின் பேரில் கொடைக்கானலில் பதுங்கியிருந்த கார்த்திக்கை கைது செய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். இதையடுத்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+