கிளாம்பாக்கம் சிக்கலான இடம் என்பதை நிரூபித்த டிராபிக்.. ஊரப்பாக்கத்தில் உடனே செய்ய வேண்டிய மாற்றம்
சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம்.. உண்மையில் ஒரு சிக்கலான இடம் என்பதை இன்றைய டிராபிக் நிரூபித்துள்ளது. இத்தனைக்கும் ஒரு வாகனம் கூட சாலையில் நிறுத்தி ஆட்களை இறக்கிவிடவில்லை.. ஆனாலும் நெரிசல் கடுமையாக உள்ளது. ஊரப்பாக்ககத்தில் உடனே செய்ய வேண்டிய மாற்றம் பற்றி பார்ப்போம்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. கிட்டத்தட்ட இன்றுடன் ஒரு மாதம் நிறைவு பெற்றுவிட்டது. இன்று முதல் சென்னையில் கோயம்பேட்டிற்கு பதில் கிளாம்பாக்கத்தில் இருந்தே தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படியே கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து பேருந்துகளும் சென்றன. கிளாம்பாக்கத்திற்கே அனைத்து பேருந்துகளும் வந்தன.

சென்னையில் பரனூர் முதல் ஊரப்பாக்கம் வரை வாகனங்கள் ஊர்ந்தபடியே வந்தன. பலரும் சொந்த ஊரில் இருந்து இன்று வந்த காரணத்தால் அதிகப்படியான வாகனங்கள் சென்னைக்குள் வந்தன. இதன் காரணமாக நெரிசல் அதிகமாக இருந்தது. அதேநேரம் கிளாம்பாக்கத்திற்கு முன்பு ஊரப்பாக்கம் சிக்னலில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உண்மையில் கிளாம்பாக்கம் என்பது சென்னை நகருக்கே முக்கியமான இடம் ஆகும். சென்னையில் வெளிவட்ட சாலை, காஞ்சிபுரம் சாலை, வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, தாம்பரம் சாலை, செங்கல்பட்டு சாலை ஊரப்பாக்கத்திற்கு ஊருக்கு செல்லும் சாலை என எல்லாமே இணையும் இடம் கிளாம்பாக்கம்.. அதை கணக்கிட்டு தான் தமிழக அரசு கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைத்திருக்கிறது..
ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், வெளிவட்ட சாலையில் செல்லும் வாகனங்கள், கேளம்பாக்கம் உள்ளிட்ட ஓஎம்ஆர் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள், தாம்பரம் செல்ல வேண்டிய வாகனங்கள், காஞ்சிபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள் என எல்லாவற்றிற்கும் ஒரே இடமாக ஊரப்பாக்கம் சிக்னல் இருக்கிறது.. ஊரப்பாக்கம் சிக்னலை கடக்காமல் சென்னைக்குள் போகவே முடியாது.. அங்கு தான் சென்னை மாநகர பேருந்துகள் வளைந்து திரும்பி சென்னைக்குள் செல்கின்றன. இதனால் வழக்கமாக அங்கு எந்த நெரிசலும் இதுவரை பெரிய அளவில் இல்லாமல் இருந்த நிலையில், இப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் வாகனங்கள் திரும்புவதால் ஜிஎஸ்டி சாலையில் இருவழியிலும் நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதுதான் ஜிஎஸ்டி சாலையில் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
ஏனெனில் அரசு கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை பல்வேறு விஷயங்களை கவனமாக செய்து வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டால், ஆபத்தான முறையில் சாலையை கடக்கிறார்கள். இதனால் அவர்களை ஊரப்பாக்கம் சிக்னல், வண்டலூர் பாலம் என எங்கும் இறக்காமல் இன்று காலை உள்ளே கொண்டு போய் இறக்கிவிட்டார்கள். அதேபோல் டவுன் பஸ்களும் டவுன் பேருந்து நிலையத்திற்கு போகாமல் நேராக உள்ளே வந்து விரைவு பேருந்து நிலையத்தின் போர்டிகோவில் ஏறி வாசலிலேயே ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றன. இது உண்மையில் சூப்பர் மாற்றம்..
ஆனால் சிக்கல் என்பது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்போது இல்லை. முழுக்க முழுக்க ஜிஎஸ்டி சாலையில், அதுவும் ஊரப்பாக்கம் சிக்னலில் தான் இருக்கிறது. இப்போது அங்கு மேம்பாலம் வண்டலூர் பாலத்தை இணைத்து அமைக்கப்பட வேண்டும். அதுவும் வாகனங்கள் எளிதாக வளைந்து செல்லும் வகையில் அமைக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நெரிசல் குறையும்.
அதேநேரம் ரயில் நிலையம் அமைக்கப்படுவதால் அதற்கும் செல்ல ஏதுவாக பாலம் வடிமைக்கப்பட வேண்டும். அப்படி செய்துவிட்டால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உண்மையில் சூப்பரான விஷயமாக மாறிவிடும். வட சென்னை மக்கள் மாதவரத்தில் ஏறி வெளிவட்டசாலை வழியாக பேருந்தில் எளிதாக போக முடிகிறது. இது நல்ல மாற்றம்.. இப்போதைக்கு ஊரப்பாக்கம் தான் ஒரே சிக்னலாகும்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications