கோயம்பேடு காவலர்.. வெளியான இளம் பெண்ணுடன் ஒன்றாக இருந்த வீடியோ.. இறுதியில் தெரிய வந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடை அடுத்த மவுலிவாக்கம் ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஆனந்த்.. இவர் கோயம்பேடு போக்குவரத்து போலீசில் பணிபுரிந்து வந்தார். இவர் முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். ஆனால் அந்த பெண் திடீரென திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காவலர் ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

சென்னை மாநகரில் கோயம்பேடு போக்குவரத்து காவலராக 35 வயதாகும் ஆனந்த் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடை அடுத்த மவுலிவாக்கம் ராஜராஜன் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தபடி, பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லை. கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டார். 2-வதாக ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார்.

Chennai Koyambedu police

ஆனால் காவலர் ஆனந்தின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த பெண் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு ஆனந்த் மது அருந்துவிட்டு வந்து தகராறு செய்வது, வீடுகள் மற்றும் வாகனங்களை அடித்து உடைப்பது, குடியிருப்பில் உள்ள பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது போன்ற பல்வேறு சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக மாங்காடு போலீசார் கடந்த மாதம் ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் காவலர் ஆனந்த் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நிபந்தனை ஜாமீனில் வந்த ஆனந்த் மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அதே பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அந்த பெண் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆனந்த் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் உறவினர்கள் போரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போரூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் திருமணத்திற்கு முன்பு இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோக்களை அனுப்பியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஆனந்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+