பள்ளிக்கரணையில் இருக்கு பயங்கர பள்ளம்.. சென்னையிலேயே மோசமான சாலை.. மடிப்பாக்கம் வழியாக போறீங்களா?
சென்னை: பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் சென்னை மடிப்பாக்கத்தில் வாகனங்களில் பயணிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்காமல் வீடு போய் சேர்ந்தாலே சாதனையாக பார்க்கப்படுகிறது என்று மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
சென்னை மாநகராட்சியின் 14 வது மண்டலமான பெருங்குடிக்கு உள்பட்ட பகுதியான மடிப்பாக்கத்தில் மழைநீர் வடிகால் பணிகள், பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக மடிப்பாக்கத்தின் அனைத்து சாலைகளுமே முழுமையாக தோண்டப்பட்டன. இதுதவிர சாலையின் ஓரங்களில் கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மடிப்பாக்கத்தின் பெரியார் நகர், ராஜராஜேஸ்வரி நகர், எல்ஐசி நகர், ராம்நகர் விரிவாக்கம், ராம்நகர் தெற்கு, டாக்டர் அம்பேத்கர் சாலை, லட்சுமி நகர், மடிப்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதிகள் என எல்லா சாலைகளுமே குழிகளால் சூழப்பட்டன.

மடிப்பாக்கம் பிரதான சாலையையும், பள்ளிக்கரணை சுண்ணாம்பு கொளத்தூரையும் இணைக்கும் டாக்டர் அம்பேத்கர் சாலை முழுமையாக சேதமடைந்து பயணிக்கவே முடியாத நிலை இருக்கிறது, சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலைகளில் ஏராளமான ஐடி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் வசிக்கிறார்கள். ஐடி நிறுவனத்தை ஒட்டியுள்ள பகுதி என்பதால் இங்கு எப்போதுமே போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சூழலில் சாலை மோசமாக உள்ளதாக வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் சேற்றிலும், பள்ளத்திலும் சிக்கி அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சென்னையிலேயே மடிப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் சாலையை போல் மோசமான சாலையை பார்க்க முடியாது என்கிறார்கள் அந்த பகுதி வாகன ஓட்டிகள். இதைவிட மோசமான சாலை இருக்க வாய்ப்பே இல்லை என்றும் குற்றம்சாட்டுகிறார்கள். போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலும் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பதாகவும், பெரிய மழை வருவதற்குள் சாலை அமைக்கவிட்டால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படும் நிலை உருவாகும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
இதுஒருபுறம் எனில், பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை எதிரில் வேளச்சேரி நோக்கி திரும்பும் சாலையில் மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளத்தை கவனிக்காமல் கார் அல்லது இருசக்கர வாகன ஓட்டிகள் சென்றால், கண்டிப்பாக விபத்தில் சிக்குவார்கள் என்கிறார்கள் வாகன ஓட்டிகள். சென்னையின் மிக நீண்ட நேர சிக்னலான காமாட்சி மருத்துவமனை சிக்னலில் புதிதாக பயணிப்பவர்கள் வேகமாக சென்றால் ஆபத்து தான் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். இந்த விவாகரத்தில் மாநில நெடுஞ்சாலை துறை உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications