சென்னை பெண் ஐடி ஊழியரை பின்தொடர்ந்த பரோட்டா மாஸ்டர்.. சாலையில் நடந்த பகீர் சம்பவம்
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஐடி ஊழியரை, வாயை மூடி இழுத்து செல்ல முயற்சி செய்த பரோட்டா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வீடு, பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடம் உள்ளிட்ட எந்த பகுதியும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைப்பதில்லை என்பது புகாராக உள்ளது. அந்த வகையில் சென்னையில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில் சுமார் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அந்தப் பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஆசாமி அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
அந்தப் பெண் வேக வேகமாக நடக்க, அந்த நபர் திடீரென பெண்ணின் வாயை மூடி அவரை இழுத்து செல்ல முயற்சி செய்துள்ளார். பதறிய அந்தப் பெண் உடனடியாக கத்தி கூச்சலிட்டுள்ளார். இதை எதிர்பாராத அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். அருகில் இருந்தவர்களின் உதவியை அணுகுவதற்குள் அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
இதையடுத்து அந்தப் பெண்ணும் அங்கிருந்து உடனடியாக துரைப்பாக்கம் காவல்நிலையம் சென்றுள்ளார். அங்கு இதுகுறித்து புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்தப் பெண் அளித்தப் புகார் உறுதி செய்யப்பட்டது. அவரைப் பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
காவல்துறை விசாரணையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஸ்வரன் (வயது 24) என்று தெரியவந்தது. மேலும் அவர் ஒரு ஹோட்டலில் பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருவதும் கண்டறியப்பட்டது. சிறிது நேரத்திலேயே காவல்துறை அவரை கைது செய்தனர். யோகேஸ்வரன் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தின்போது யோகேஸ்வரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. ஐயா மன்னிச்சுக்கோங்க. குடிபோதையில் என்ன செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் காவல்நிலைய கழிப்பறையில் அவர் வழுக்கி விழுந்ததில், லோகேஸ்வரன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications