செல்வத்துக்கு இது தேவையா.. நாய்க்கு தாலி கட்டியவர் மாமியார் வீட்டுக்கு போனார்
நாய்க்கு தாலி கட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒருவர் நாய்க்கு தாலி கட்டியுள்ளார். கல்யாணம் நடந்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் "மாமியார்" வீட்டுக்கு போய்விட்டார்.
காதலர் தினம் என்றாலே சில இந்துத்துவா அமைப்புகளுக்கு ரணத்தை காய்ச்சி காதில் ஊற்றுவது போலதான். அதனால் காதலர் தினத்தன்று வீம்புக்கு என்றே எதையாவது ஏடாகூடமாக செய்து பரபரப்பை ஏற்படுத்துவது இயல்பான ஒன்று.
ஆண் நாய், பெண் நாய் இரண்டையும் குளிக்க வைத்து, அழகுபடுத்தி, மாலை அணிவித்து, ஊர்வலமாக கொண்டு வந்து மந்திரங்கள் முழங்க கல்யாணம் நடத்தி வைப்பார்கள். இது போன்று இந்து மகா சபை ஏற்கனவே செய்திருக்கிறார்கள்.

இளம்பெண்கள்
அதேபோல, இந்து முன்னணி சார்பில் சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் கழுதைக்கும், நாய்களுக்கும் கல்யாணம் நடந்திருக்கிறது. இப்படி நாய்கள், கழுதைகளுக்கு கல்யாணம் செய்துவிட்டு, காதலர் தினத்துக்கு எதிராக கோஷங்களையும் எழுப்புவார்கள்.

எதிர்ப்பு தினம்
காதல் என்ற பெயரில் பெரும்பாலும் இளம் பெண்களிடம் அத்துமீறல் மற்றும் பாலியல் வன்கொடுமை நடப்பதாக இவர்கள் காரணம் சொல்கிறார்கள். அப்படித்தான் இந்த வருடமும் தர்ம ரக்ஷன சபா சார்பில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்க்கு தாலி
தர்ம ரக்ஷன சபா அமைப்பின் மாநில தலைவர் செல்வம். சென்னை கொருக்குப்பேட்டை மன்னப்ப தெருவில் வசித்து வருகிறார். காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்க்கு தாலி கட்டியுள்ளார். தாலியை கட்டியது மாநில தலைவர் செல்வம்தான். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

எச்சரிக்கை
இந்த தகவல் அறிந்து கொருக்குப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வம் உட்பட 4 பேரை கைது செய்தனர். டிடிவி தினரகன் உள்ளிட்டோர் மீது இணையத்தில் அவதூறாக கருத்துக்களை பரப்பியதால், புகார்கள் அளிக்கப்பட்டு பலமுறை போலீசாரால் எச்சரிக்கை செய்யப்பட்டவர்தான் செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாலெண்டின் மீம்ஸ்












Click it and Unblock the Notifications