காலையிலேயே அதிர்ச்சி.. சென்னையை சூழ்ந்த கரும்புகை.. மணலி அருகே திடீர் தீ விபத்து.. அலறி ஓடிய மக்கள்
சென்னை: சென்னை அருகே தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை அடுத்த மணலியில் வாயக்காடு என்ற இடத்தில், தனியாருக்கு சொந்தமான ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இன்று அதிகாலை 1 மணியளவில் இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது..

குடோன்: இந்த குடோனில் தங்கியிருந்த ஊழியர்கள், குடோனில் தீ பற்றியதை பார்த்ததுமே, அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தந்தனர்.
இதையடுத்து, எண்ணூர், திருவொற்றியூர், மணலி, தண்டையார்பேட்டை, மீஞ்சூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து
20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.. 50-க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகிறார்கள்..
தீயணைப்பு வீரர்கள்: ஆனால், மளமளவென தீ கொழுந்துவிட்டு எரிய துவங்கிவிட்டதால், தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.. எனவே, ராட்சத தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, மீண்டும் தீயை அணைக்க வீரர்கள் முயன்றனர்.
ஆனால், அதற்குள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. இதையடுத்து, மெட்ரோ லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை கட்டுக்குள் கொண்டுவர வீரர்கள் போராடி வருகிறார்கள்.. ஆனாலும், அந்த பகுதியே அடர்ந்த கரும்புகையால் சூழ்ந்துள்ளது.. 100 அடிக்கும் மேலே கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கும் தீயை கட்டுப்படுத்த இதுவரை முடியவில்லை.
கரும்புகை: எனினும் மெட்ரோ வாட்டர் லாரிகள் மூலம், தீயை கட்டுப்படுத்த வீரர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.. இதனால் அந்த பகுதியில் காலையிலேயே கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். மணலி பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications