Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணமணக்குதே.. சென்னை மெரினா பீச்சில் நாளை உணவு திருவிழா.. மதுரை தோசைக்கறி.. மட்டன் உப்புக்கறி.. வாவ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை சென்னையில் தொடங்குகிறது.. இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவுகள் பிரசித்திபெற்றவை.. ஒவ்வொரு ஊருக்கும் உணவின் சுவையும் மாறுபடும். ஆனால் எல்லா ஊர்களின் சுவையும் ஒரே ஊரில் கிடைத்தால்? எல்லா ஊர்களின் உணவும் ஒரே இடத்தில் கிடைத்தால்? சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று வந்துள்ளது.

chennai madurai dosai curry food festival

உணவு திருவிழா: நாளை உணவு திருவிழா சென்னையில் நடக்க போகிறது.. சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான உணவுகள். முன்னணி உணவகங்களின் உணவு வகைகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அவற்றிற்கு இணையாக சுவையும், தரமும் நிறைந்த உணவுகள் கொண்ட உணவு திருவிழா நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா. 20.12.2024 முதல் 24.12.2024 வரை சென்னை, மெரினா பீச்சில் நடக்கிறது.. இந்த உணவு திருவிழாவை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்.. இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

சுயஉதவிக்குழுக்கள்: "தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

உணவு திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமன்றி தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், நீலகிரி ராகி களி - அவரை குழம்பு, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், காஞ்சிபுரம் கோவில் இட்லி,

மட்டன் உப்புக்கறி: சிவகங்கை மட்டன் உப்புக்கறி, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சை பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானிய புட்டு, மயிலாடுதுறை இறால் வடை, நாகை மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம் பொறி, சென்னை தயிர் பூரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

உடனடியாக சமைப்பதற்கும் மற்றும் உண்ணுவதற்கும் ஏற்ற 67 வகையான தயார் நிலை உணவுப் பொருட்களை, உணவுத் தரச் சான்றிதழ் பெற்ற 24 குழுக்களைச் சேர்ந்த மகளிர் சுகாதாரமான முறையிலும், கலப்படமின்றியும் தயாரித்து தகுந்த முறையில் விற்பனை செய்ய 6 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கைவினை பொருட்கள்: மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை (வெள்ளிக்கிழமை) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+