லோன் ஆப்களில் கடன்.. ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் இழப்பு.. சென்னையில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் வரை பணத்தை இழந்த வினோத் குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சென்னை: லோன் ஆப்களில் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடன் நெருக்கடி காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த வினோத் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் அதிகரித்ததால் கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு நவம்பரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.
அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி தீர்ப்பளித்தது.

ஆன்லைன் சூதாட்ட சட்டம்
இதையடுத்து மீண்டும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பா் 3ம் தேதி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, நவ.5ம் தேதி சட்டசபை கூட்டப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதேசமயம், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அரசாணை மட்டும் பிறப்பிக்கப்படாமல் இருந்தது. ஆளுநா் கோரியதன் அடிப்படையில், இந்த மசோதா தொடா்பான உரிய விளக்கங்களும் அளிக்கப்பட்டது.

மசோதாவுக்கு ஒப்புதல் இல்லை
ஆனாலும் ஆளுநர் ஆர்என் ரவி ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கு காலதாமதம் செய்ததால் கடந்த டிசம்பர் மாதமே அந்த தடைச் சட்ட மசோதா காலாவதியாகிவிட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து ஆன்லைன் ரம்மி ஆப்களில் பணம் செலுத்தி விளையாடுவது தவிர்க்கப்பட்டிருந்தது.

தற்கொலைகள் அதிகரிப்பு
இந்நிலையில் தடைச் சட்டம் மசோதா காலாவதியாகி விட்ட நிலையில் தற்போது சட்டம் நிறைவேற்றப்படாததால் மீண்டும் ஆன்லைன் ரம்மி சூதாட்டங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏராளமானோர் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சத்தை இழந்த சென்னையைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரூ. 20 லட்சன் கடன்
சென்னை மாடவாக்கம் கணபதி காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார். இவர் சென்னையில் மருந்து நிறுவன பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவர் பல லோன் ஆப்களில் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை விளையாடி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்த லோன் ஆப்களில் இருந்து வந்த நெருக்கடி வந்துள்ளது.

தூக்கிட்டு தற்கொலை
அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வேதனையில் வினோத் குமார் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வினோத் குமார் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி தொடர்ந்து வினோத் குமாரை எச்சரித்து வந்தும், அதனை கேட்காமல் ஆன்லைன் ரம்மி ஆடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications