சென்னையில் நடக்கும் பெரிய பொறியியல் அதிசயம்.. அதலபாதாளத்தில் வரும் தரமான சம்பவம்.. வாவ்!
சென்னை: இந்தியாவிலேயே மிக ஆழமான மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்று சென்னையில் கட்டப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளில், திருமயிலை நிலையம் மிக முக்கியமான மற்றும் ஆழமான கட்டுமானமாகத் திகழ்கிறது. தரைமட்டத்திலிருந்து சுமார் 38.79 மீட்டர் ஆழத்தில் அமையவுள்ள இந்நிலையம், 2028-ஆம் ஆண்டு வாக்கில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையம் சிக்கலான பொறியியல் நுட்பங்களுடன் கூடிய பல அடுக்கு கட்டமைப்பாக உருவாகிறது. வழித்தடம் 3 மற்றும் 4 ஆகியவை இங்கு நிலத்தடியில் ஒன்றையொன்று சந்திக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன. கச்சேரி சாலை போன்ற குறுகிய பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதைக் குறைப்பதற்காகவே இந்தச் செங்குத்து வடிவமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
திருமயிலை நிலையத்தில் ஒரு பிரதான இணைப்புத் தளம் மற்றும் மூன்று ரயில் தளங்கள் என மொத்தம் நான்கு நிலத்தடி நிலைகள் உள்ளன. இதில் வழித்தடம் 3 மிக ஆழமான பகுதியிலும், வழித்தடம் 4 அதற்கு அடுத்தடுத்த நிலைகளிலும் செங்குத்தான அடுக்குகளாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது..
Phase-II-ன் முக்கிய சந்திப்பு நிலையமான திருமயிலை, மாதவரம்-சிப்காட் மற்றும் பூந்தமல்லி-லைட் ஹவுஸ் ஆகிய இரு வழித்தடங்களை இணைக்கிறது. புவியியல் நிலைமைகள், சாலை அகலம் போன்ற சவால்கள் காரணமாக, இதை அமைப்பது கடினம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கு மூன்று தளங்கள் அமையவுள்ளன. மாதவரம்-சிப்காட் ரயில்கள் முதல் (17 மீ கீழ்) மற்றும் மூன்றாவது தளத்திலும் (35 மீ கீழ்) இயங்கும். பூந்தமல்லி-லைட் ஹவுஸ் ரயில்கள் இரண்டாவது தளத்தில் (24 மீ கீழ்) இயக்கப்படும்.
மெட்ரோ பணிகள் தீவிரம்
நில ஆய்வில், திருமயிலையில் பாறைகள், பாறை மண் கண்டறியப்பட்டுள்ளது. "நிலையப் பெட்டி அல்லது தடுப்புச் சுவர் (diaphragm wall) கட்டமைப்பதற்கும், சுரங்கப் பணிகள் மேற்கொள்வதற்கும் இது கடினமாக இருக்கும்" என்று ஓர் அதிகாரி தெரிவித்தார்.
₹61,843 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கீழ், மாதவரம் முதல் தரமணி வரையிலான பல இடங்களில் தடுப்புச் சுவர் பணிகள் நடைபெறுகின்றன. 6-8 மாதங்களில் நிறைவடையவுள்ள இப்பணிகளை அடுத்து, இந்த ஆண்டின் பிற்பகுதியில் சுரங்கப் பணிகளைத் தொடங்க மெட்ரோ ரயில் தயாராகி வருகிறது.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான (TBM) விவரக்குறிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், ஒப்புதல் பெற்று தொழிற்சாலை பரிசோதனைக்குப் பின் அவை நகரத்திற்கு வரும். இரண்டாம் கட்டத்திற்காக மொத்தம் 23 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் கூறினர்.
மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள்
₹63,246 கோடியில் கட்டப்படும் சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிட்டத்தட்ட 40% பணிகள் நிறைவடைந்துள்ளது. 118.9 கி.மீ., தூரத்திற்கு இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. பூந்தமல்லியில் இருந்து போரூர் வரையிலான 9 கிமீ தூரம் 2025 டிசம்பரில் திறக்கப்பட உள்ளது. 50.5 கிமீ சுரங்கப்பாதையில் 19 கிமீ சுரங்கப்பாதை மட்டுமே தற்போது முடிக்கப்பட்டுள்ளது.
காரிடார் 3ல் ரத்து செய்யப்பட்ட ஸ்டேஷன் டெண்டர் காரணமாக பணிகள் தாமதம் அடைந்து உள்ளது. விரைவில் போரூர்-கோடம்பாக்கம் ரூட்டை திறக்க அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-IIத்தில் மெட்ரோ நிலையங்களை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தேர்தல் முடிந்ததும் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
பணிகள் தீவிரம்
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ இரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து பூந்தமல்லி பணிமனை வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடம் 4-ல் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வாகனப் போக்குவரத்தை மேம்படுத்தவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளின் தொடர்ச்சியாக, முல்லைத்தோட்டம் மற்றும் கரையான்சாவடி நிலையங்களுக்கு இடையே மேம்பாலப் பணிகள் நிறைவுற்று முக்கியமான மைல்கல்லை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் எட்டியுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், போரூர் மற்றும் பூந்தமல்லி பணிமனை இடையே கடைசி கட்ட சில பேட்ச் வேலை கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications