சென்னையில் காலையிலேயே பரிதவித்த மெட்ரோ ரயில் பயணிகள்.. டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட சிரமம்! என்னாச்சு
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் வினியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோவில் டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சர்வர் கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் அதுவரை ரயில் டிக்கெட்டுகளை கவுண்ட்டர்களில் பெற்றுக்கொள்ளுமாறு மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கடும் போக்குரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் தான் சிறந்த தீர்வாக உள்ளது. புறநகர் ரயில் வழித்தடங்கள் இல்லாத இடங்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலே பெரிதும் கை கொடுத்து வருகிறது.

பீக் நேரங்களில் பேருந்துகள், பைக்குகளில் சென்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில் சிக்கிக் கொள்ளும் நிலமை ஏற்படும். இதனால், மெட்ரோ ரயில்கள் இருக்கும் வழித்தடங்களில் மெட்ரோவில் பயணிக்கவே பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். இதன்காரணமாக மெட்ரோ ரயில்களில் தற்போது புறநகர் ரயில்களுக்கு நிகராக கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை பீக் நேரங்களில் பயணிகள் கூட்டம் அலைமோது.
இந்த நிலையில் இன்று காலையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான ஆன்லைனில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஏன் திடீரென டிக்கெட் முன்பதிவு செய்யமுடியவில்லை என பயணிகள் பலரும் சிரமத்திற்குள்ளானார்கள். மேலும் இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பினர். இதையடுத்து மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்தது.
மேலும், மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் புக் செய்வதற்கான சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்யும் பணி நடந்து வருவதாகவும் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக வெளியான அறிவிப்பில், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.
அதுவரை பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ஆன்லைன் டிக்கெட் வினியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. சர்வர் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில், மீண்டும் வழக்கம்போல் மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை தொடங்கியுள்ளது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications