சென்னையில் கைவிடப்படும் ஆறு ரயில் நிலையங்கள்.. மெட்ரோ 2ம் கட்டத்தில் முக்கிய மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில் 750 மீட்டருக்கும் குறைவான இடைவேளையில் திட்டமிடப்பட்ட 6 ரயில் நிலையங்களை கைவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், 750 மீட்டருக்கும் குறைவான இடைவேளையில் திட்டமிடப்பட்ட 6 ரயில் நிலையங்களை கைவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி உள்பட 6 இடங்களில் ரயில் நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுகிறது.
சென்னை புரசைவாக்கம் அருகே டௌடன் ஜங்ஷன் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயின்ட் ஜோசஃப் கல்லூரி உள்பட 6 ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம், திட்டப் பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும் என மெட்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர்.
சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை,வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை இருவழித்தடங்களில் ரயில்கள் ஓடுகின்றன. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது. அதேபோல் வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் இன்னொரு வழித்தடமும் உள்ளது.

மெட்ரோ ரயில்கள்
மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதல்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்த நிலையில் , இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி உள்ளது. மாதவரம்-சிறுசேரி, மாதவரம்-சோழிங்கநல்லூர், பூந்தமல்லி-விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எப்படி அமைய போகிறது
சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்படும் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணியில் 128 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவற்றில் ஓட்டேரி பட்டாளம், பெரம்பூர், அயனாவரம், புரசைவாக்கம், அடையாறு டிப்போ, இந்திரா நகர், தரமணி, திருவான்மியூர் உள்பட 48 ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்கப்பட உள்ளது. மெட்ரோ ரயில் வழித்தடம் சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆகும் செலவு ரூ.61,843 கோடியாகும். இவை அனைத்தும் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கவும் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கைவிடப்படும் ரயில் நிலையங்கள்
அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணியில் திட்டமிடப்பட்டிருந்த டௌடன் ஜங்ஷன், பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி மற்றும் தபால் பெட்டி ஆகிய ரயில் நிலையங்கள் நிலத்துக்கடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இவைகளுடன், செயின்ட் ஜோசஃப் கல்லூரி ரயில் நிலையம் என 6 ரயில் நிலையங்கள் அமைக்கும் திட்டம் கைவிடப்படுகிறது.

அவசர கால வெளியேற்றம்
வழக்கமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் ஒரு கிலா மீட்டர் இடைவெளியில் அமைக்கப்பட்டு வருகிறது. மக்கள் எளிதாக பயன்படுத்தவும், அவசர காலத்தில் எளிதாக வெளியேறவும் இந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் மிகக்குறுகிய தூரத்தில் அடுத்தடுத்து ரயில் நிலையங்கள் அமைப்பது மெட்ரோ நிறுவனத்திற்கு சவாலாக இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை கண்டறிந்துள்ளது.

6 இடங்கள்
சென்னை புரசைவாக்கம் அருகே டௌடன் ஜங்ஷன் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி, தபால் பெட்டி, செயின்ட் ஜோசஃப் கல்லூரி உள்பட 6 ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம், திட்டப் பணிக்கான செலவில் ரூ.1,200 கோடி வரை குறையும் என மெட்ரோ அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கைவிடப்படுகிறது
சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, குறைந்த தூரத்தில் அடுத்தடுத்த ரயில் நிலையங்கள் அமைவதை தடுக்கலாம். மாதவரத்தில் தபால் பெட்டி என்ற இடத்தில் அமையவிருந்த ரயில் நிலையம் கைவிடப்பட மிக குறுகிய வளைவு அப்பகுதியில் இருப்பதே காரணம் ஆகும். ஏனெனில் அங்கு ரயில் நிலையத்தை பராமரிப்பது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்பதால் கைவிடுகிறோம். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வெறும் தபால் பெட்டி மற்றும் மீனாட்சி கல்லூரி ஆகிய ரயில் நிலையங்களை கைவிடுவதன் மூலம் செலவினத் தொகையில் ரூ.450 கோடி வரை மிச்சமாகும் என்றார்கள்.

மீனாட்சி கல்லூரி
அதாவது 45.8 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மாதவரம் பால்பண்ணை - சிறுசேரி சிப்காட் என்ற மூன்றாம் பிரிவுக்குள் தபால் பெட்டி, டௌடன், செயின் ஜோசஃப் கல்லூரி ரயில் நிலையங்கள் வரவிருந்தன. கலங்கரை விளக்கம் - பூவிருந்தமல்லி பைபாஸ் என்ற நான்காம் பிரிவில் பட்டினப்பாக்கம், நடேசன் பூங்கா, மீனாட்சி கல்லூரி ரயில் நிலையங்கள் அமையவிருந்தன. இதில் மாதவரம் பால் பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை ரயில் நிலையங்களிலிருந்து தபால் பெட்டி ரயில் நிலையம் முறையே 980 மீட்டர் மற்றும் 684 மீட்டர் இடைவெளியில் அமையவிருந்தது. இதுபோல மீனாட்சி கல்லூரியும் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வெறும் 725 மீட்டரிலும் அமையவிருந்தன. இப்படியே ஆறு ரயில் நிலையங்களுமே ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கும் குறைவான இடைவெளியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்ததால் இவற்றை கைவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதிக தூரம்
ஆனால் குறைந்த தூரம் என்று மெட்ரோ அதிகாரிகள் காரணம் சொன்னாலும், ஒரு ரயில் நிலையத்தில் இருந்து இன்னொரு ரயில் நிலையத்தை அடைய மக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லுவும் அளவுக்கு இருக்கும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். குறிப்பாக தபால் பெட்டி ரயில் நிலையம் கைவிடப்படுவதை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அத்துடன் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்கள். இங்கு குறைவானவர்களே இருக்கிறார்கள் என்பதால்தான் ரயில் நிலையத்தை கைவிட்டிருப்பார்கள் என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

திட்ட செலவு குறைந்தது
முன்னதாக முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணியின்போது சென்னை சென்டிரல் மற்றும் ஓமந்தூரார் ரயில் நிலையங்களுக்கு இடையே 1.5 கிலோ மீட்டர் தொலைவாக உள்ளது. இதனிடையே சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்கா அருகே, இரண்டு ரயில் நிலையங்களுக்கும் இடையே ஒரு அவசரகால வெளியேற்றும் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோலவே, இரண்டாம் கட்டப் பணியிலும், ரயில் நிலையங்கள் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு இடையே அவசரகால வெளியேறும் பகுதி அமைக்கப்படலாம் என்கிறார்கள். மெட்ரோ ரயிலில் சின்ன சின்ன மாற்றங்கள் காரணமாக முதலில் ரூ.89,000 கோடிக்கு திட்டமிடப்பட்ட இரண்டாம் கட்ட மெட்ரோ செலவு தற்போது 61,843 கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications