Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. மெட்ரோ நிறுவனம் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவது, எச்சில் துப்புவது, குப்பை போடுவது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பயணிகள் மற்றும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை உருவாகி வருகிறது. பொதுமக்களின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும், சுகாதாரத்தையும் பராமரிக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலைய நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களிலும் மெட்ரோ ரெயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

chennai-metro-train-fine-fines-for-using-tobacco-products-at-metro-stations

போக்குவரத்து நெரிசல்

ஐடி துறை, கல்வி, வேலை, வேலைவாய்ப்பு தொழில் என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்தும் சென்னைக்கு வந்து ஏராளமானோர் வசித்து வருகின்றனர். சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. சென்னையில் பிரதான பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல் தான். இதனால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நீண்ட நேரம் தேவைப்படும் சூழல் உள்ளது.

பொது போக்குவரத்து

சென்னையில் வாழும் மக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது. சென்னையில் கடந்த 2007-ம் ஆண்டில் மெட்ரோ ரயில் திட்டபணிகள் தொடங்கப்பட்ட நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 2015-ம் ஆண்டில் அமலுக்கு வந்தன.

வரப்பிரசாதம்

ஆரம்பத்தில் குறைவான மக்கள் மட்டுமே மெட்ரோ ரயிலைப் பயன்படுத்திய நிலையில், தற்போது பெரும்பாலான மக்கள் மெட்ரோவை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பயணிகளின் வசதிக்காக தொடர்ந்து புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை பெரும்பாலானோருக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது. ஆனால், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், எச்சில் துப்புவது, குப்பை போடுவது போன்றவற்றை செய்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

கேள்விக்குறியான சுகாதாரம்

மெட்ரோ சுகாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வந்த நிலையில், தற்போது மெட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில், மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் குப்பை கொட்டுவது, எச்சில் துப்புவது, புகையிலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ நிறுவனம் புதிய அறிவிப்பு

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மெல்லும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும், அதன் விளைவாக எச்சில் துப்புவதாலும், குப்பைகள் போடுவதாலும் அதிகரித்து வரும் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் புகார்களைக் கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தூய்மையையும் சுகாதாரத்தையும் பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி உள்ளது.

விதிமீறல்கள்

நடைமேடை பாதுகாப்புப் பணியாளர்கள் பயணிகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் பாதுகாப்பு கண்காணிப்பு அறை, விதிமீறல்களை தீவிரமாகக் கண்டறிந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரயில் நிலையங்களிலும், மெட்ரோ ரயில்களுக்குள்ளும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தூய்மை மற்றும் நடத்தை விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+