சென்னை மெட்ரோ அப்டேட் 2026.. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் புதிய வழித்தடங்கள்.. பாதியாகும் பயண நேரம்
சென்னை: சென்னை மாநகரில் நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து நெரிசலை குறைக்க மிக வேகமாக வளர்ந்து வரும் மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. இந்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - வடபழனி, கோயம்பேடு - சென்னை டிரேட் சென்டர், வடபழனி - பனகல் பூங்கா உள்பட பல்வேறு வழித்தட பணிகள் எப்போது முடியும் என்பது பற்றி பார்ப்போம்.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில் என்பது பரங்கிமலை-சென்ட்ரல் (வடபழனி, திருமங்கலம் வழித்தடம்), விமான நிலைய முதல் விம்கோ நகர் (சைதாப்பேட்டை, எல்ஐசி) வழித்தடம் என இரு வழித்தடத்தில் ரயில்கள் ஓடுகின்றன. ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு கோடி அளவிற்கு பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த வழித்தத்திற்கு கிடைத்த வெற்றியையடுத்து இரண்டாம் கட்ட வழித்தட பணிகள் காரிடர் 3, 4, 5 என பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு வெறும் 25 நிமிடம்
இதில் எந்த வழித்தடத்தில் எந்த பணிகள் நடக்கின்றன. எவ்வளவு முடிந்துள்ளது. எப்போது முழுமையாக முடியும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ள. பூந்தமல்லி - வடபழனி (காரிடர் 4): பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் நேற்று வெற்றிகரமாகச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வரும் பிப்ரவரி 2026-க்குள் பயணிகள் பயன்பாட்டிற்காக இந்த வழித்தடம் திறக்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது திறக்கப்பட்டால், பூந்தமல்லியில் இருந்து வடபழனிக்கு வெறும் 25 - 30 நிமிடங்களில் சென்றுவிட முடியும்.
சென்னை டிரேட் சென்டர் - சோழிங்கநல்லூர்
அடுத்ததாக கோயம்பேடு - சென்னை டிரேட் சென்டர் (காரிடர் 5): இந்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி ஜூன் 2026-ல் இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. பணிகள் இப்போது நடைபெறும் அதே வேகத்தில் தொடர்ந்தால், சென்னை டிரேட் சென்டர் - சோழிங்கநல்லூர் மற்றும் வடபழனி - பனகல் பூங்கா (காரிடர்r 4) ஆகிய பகுதிகள் 2026 இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர அதிக வாய்ப்பு இருக்கிறது. மயிலாப்பூர் வழித்தடம், சிறுசேரி மாதவரம் வழித்தட பணிகள் என எல்லா மெட்ரோ பணிகளும் முடிய 2028ம் ஆண்டு தான் சாத்தியம் ஆகும்.
விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ
அதேநேரம் சென்னை மாநகருக்கு வெளியே வளரும் பகுதிகளையும் இணைக்க சென்னை மெட்ரோ நிறுவனம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிற. குறிப்பாக விமான நிலையம் - கிளாம்பாக்கம்: புதிய பேருந்து நிலையத்தை இணைக்கும் இந்த வழித்தடத்திற்காக தமிழக அரசு சுமார் ₹1,964 கோடி நிதி ஒதுக்கி, நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது.
பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம்
அதேபோல் விமான நிலையம் புதிதாக வர உள்ளதால், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம்- பரந்தூர் விமான நிலையத்தை நோக்கிய இந்த விரிவாக்கப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் தொடங்குகிறது. இதேபோல் கோயம்பேடு - பட்டாபிராம்: ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதி மக்களுக்காக இந்த வழித்தடம் ஃபாஸ்ட் ட்ராக் முறையில் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கோவை & மதுரை மெட்ரோ நிலை என்ன?
கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மீண்டும் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க தமிழக அரசு தயாராகி வருகிறது. மக்கள் தொகை மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த சில விளக்கங்களுக்குப் பிறகு, அடுத்த ஒரு வாரத்தில் இந்த அறிக்கைகள் அனுப்பப்பட உள்ளது. எனவே கோவை, மதுரைவுக்கு நிச்சயம் மெட்ரோ ரயில் வரும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது,
தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ:
தெற்கு சென்னை மக்களின் நீண்ட நாள் கனவான தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி வழித்தடத்திற்கான DPR பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. 21.5 கி.மீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் சுமார் 19 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளத. இதற்கான ஒப்புதல்கள் மத்திய அரசு மற்றும் மாநில அரசிடம் கிடைத்த பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் தொடங்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த வழித்தடங்களில் வேகமாக பணிகள் நடந்தால் பயண நேரம் நிச்சயம் பாதியாக குறையும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications