சென்னையில் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்த தம்பி.. அடித்துக் கொன்ற அண்ணன்.. பரபர வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் தன் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் தம்பியை அண்ணன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசிப்பவர் செந்தில் வயது 32. பிரைவேட் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். செந்திலுக்கு அவருடைய அண்ணன் பழனியின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியில் செந்திலின் முதல் மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாராம். இதன் பின்னர் செந்தில் இரண்டாவாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.

அடிக்கடி தகராறு

அடிக்கடி தகராறு

இந்த சூழலில் செந்தில் தனது சகோதரன் பழனியின் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

அடித்துக் கொலை

அடித்துக் கொலை

நேற்று முன்தினம் இரவு செந்தில் தனது அண்ணன் மனைவியுடன் பேசி கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பழனி தனது தம்பி செந்திலை கண்டித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சண்டை போட்ட நிலையில், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பழனி தனது தம்பியை இரும்பு கம்பி மற்றும் சிமென்ட் கல்லால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே செந்தில் இறந்தார்.

போலீஸ் வந்தது

போலீஸ் வந்தது

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றார்கள். அங்கு செந்திலின் உடலை கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவான பழனியை 1 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

தலைகாட்ட முடியவில்லை

தலைகாட்ட முடியவில்லை

பழனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், எனது தம்பி செந்தில் எனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். பல முறை கண்டித்தும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடமறுத்துவிட்டார். இந்த தவறான பழக்கத்தால் வெளியில் என்னால் தலைகாட்ட முடியாத நிலை இருந்தது. அத்துடன். எனது மனைவியுடன் செந்தில் இருந்ததால் ஆத்திரத்தில் அடித்து கொலை செய்தேன்" என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+