‛அரசு குடியிருப்பு’ பிரச்சனை.. 4வது நாளாக போராடிய நொச்சிக்குப்பம் மீனவர்கள் கைது.. பரபர சென்னை
சென்னை: சென்னையில் புதிய குடியிருப்புகளை தங்களுக்கு ஒதுக்ககோரி 4வது நாளாக தொடர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்ட வந்த நொச்சிக்குப்பம் மீனவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பாதுகாப்பு கருதியும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சி மற்றும் தற்போதைய திமுக ஆட்சியிலும் மீனவர்களுக்கு குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் நொச்சிக்குப்பத்தில் புதிதாக குடிசை மாற்று வாரியத்தால் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

நொச்சிக்குப்பம் விரிவடைந்த மீனவ குடும்பங்களுக்காக மொத்தம் 1188 புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் இந்த குடியிருப்புகள் மாற்று கிராம மக்களுக்கு வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் பிறருக்கு வழங்கப்படுவதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். அதோடு இந்த குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் வலியுறுத்தினர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் புதிய குடியிருப்புகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், இதற்கு முட்டுக்கட்டை போடும் மயிலாப்பூர் எம்எல்ஏ த வேலுவை கண்டித்தும் நொச்சிக்குப்பம் மீனவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்ந்தது. போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கூறியும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்நிலையில் போலீசார் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களை அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் மயிலாப்பூர் அம்பேத்கர் மேம்பாலம் அருகிலுள்ள சமூக நலக்கூடத்தில் வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் நொச்சிக்குப்பத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications