ஆடாத ஆட்டமென்ன.. “ஆக்ஷனில்” இறங்கிய அதிகாரிகள்! ஆம்னி பஸ் கட்டண கொள்ளை - வளைத்து வளைத்து அபராதம்
சென்னை: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுக்காக தலைநகர் சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். இவர்களின் தேவையை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்துக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலித்து வந்தன. இந்த நிலையில் சென்னையில் நேற்று சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்த 49 தனியார் ஆம்னி பேருந்துகளிடம் ரூ.92,000 அபராதம் வசூலித்தனர்.
சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பணி நிமித்தமாக தங்கி இருக்கும் மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்று திரும்புவது வழக்கமாக உள்ளது.
இவ்வாறு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோரில் பலர் ரயில் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளையே சார்ந்து உள்ளனர். பண்டிகை கால சிறப்பு பேருந்துகள் அரசால் இயக்கப்பட்டாலும் தனியார் பேருந்துகளில் ஏராளமான மக்கள் ஊர்களுக்கு செல்கிறார்கள்

ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளை
வேறு வழியின்றி தனியார் ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் செல்ல வேண்டி இருப்பதால் அவர்களின் இயலாமையை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கமாக தாங்கள் வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு டிக்கெட் விலையை உயர்த்தி பயணிகளிடம் கட்டண கொள்ளையில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.

மக்கள் அவதி
பொதுமக்களும் எப்படியாவது ஊருக்கு போய் சேர்ந்தால் போதும் என்ற மனநிலையில் ஆயிரக்கணக்கில் டிக்கெட் கட்டணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் செல்கின்றனர். ஊரிலிருந்து மீண்டும் பெரு நகரங்களுக்கு பணிக்கு திரும்பும் சமயத்திலும் இதே நெருக்கடியை மக்கள் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு
இதனை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் ஒவ்வொரு பண்டிகை காலத்தின்போதும் கோரிக்கையாக விடுத்து வருவது வழக்கம். இந்த நிலையில், நேற்று டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை, ஜனவரி 1 புத்தாண்டு விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை வருவதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

பயணிகள் குற்றச்சாட்டு
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் சென்னையிலிருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கம்போல கூடுதல் கட்டணங்களை தங்களிடம் வசூலிப்பதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. சமூக வலைதளங்களிலும் பலர் குற்றம்சாட்டி இருந்தனர்.

சென்னையில் சோதனை
இதுகுறித்து சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவிக்கையில், "சென்னை போக்குவரத்து ஆணையரின் ஆணையின் அடிப்படையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைக்காக வழக்கத்துக்கு அதிகமான ஆம்னி பேருந்துகள் பயண கட்டணம் வசூலிப்பது குறித்து விசாரிக்க 2023 ஜனவரி 2 ஆம் தேதி வரை சோதனை நடத்தப்படும்.

அபராதம் விதிப்பு
அதன் அடிப்படையில் சென்னை கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடியில் சிறப்பு ஆம்னி பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், வரி செலுத்தாமல் இயக்கப்படும் பிற மாநில ஆம்னி பேருந்துகள் என 49 பேருந்துகளிடம் ரூ.92,500 அபராதம் வசூல் செய்யப்பட்டது.

திருப்பி கொடுக்கப்பட்ட கட்டணம்
அத்துடன் அதிக கட்டணம் செலுத்திய 9 பயணிகளுக்கு ரூ.9,200 கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. பண்டிகை, விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், வரி செலுத்தப்படாமல் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் எச்சரித்து உள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications