Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டேரி காவலர், மகளுடன் கருணை கொலை செய்யுமாறு கதறல்.. நெஞ்சை உறைய வைக்கிறது.. டிடிவி தினகரன் வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்வீட் பதிவில், "சென்னை ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி மற்றும் அவரின் மகள் பிரதிக்‌ஷா ஆகியோர், தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு டிஜிபி அலுவலகம் எதிரே போராட்டம் நடத்திய காட்சி மனதை உறைய வைக்கிறது

chennai Otteri constable Gothandapani and daughter heartbreaking protest : TTV dhinakaran tweet

அரசு மருத்துவமனையில் சிறுநீரகப் பிரச்னை என அனுமதிக்கப்பட்ட குழந்தை, மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் கால் அகற்றும் நிலைக்குச் சென்றுள்ளது என்ற தந்தையின் குற்றச்சாட்டிற்கு அரசு மருத்துவமனை தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களின் அலட்சியப் போக்கினால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளிவரும் செய்திகளுக்கு உரிய விளக்கம் அளிக்கும் வகையில், விசாரணைக் குழுவை அமைத்து உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருவதால், அரசு மருத்துவமனையின் சிகிச்சை தரம் குறித்து மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து வருவதை அரசு உணர வேண்டும்.

மக்கள் நலன் சார்ந்த இந்த விஷயத்தில் அரசு உரிய கவனம் செலுத்தி, மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். " என்று கூறியுள்ளார்.

என்ன நடந்தது?: முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் சென்னை தலைமைச் செயலகத்தின் முன்னே தனது குழந்தைக்காக ஓட்டேரி காவல் நிலைய தலைமைக் காவலர் கோதண்டபானி போராட்டம் நடத்தி இருந்தார். அதனை தொடர்ந்து மீண்டும் டிஜிபி அலுவலகத்தின் முன்பு நேற்று தர்ணாவில் ஈடுபட்டார்.

தலைமை காவலர் கோதண்டபானி, சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தனது 10 வயது மகள் பிரதிக்‌ஷாவை சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். மருத்துவமனை நிர்வாகத்தின் தவறான சிகிச்சை காரணமாக மகளின் கால் பாதிக்கப்பட்டதாக ஏப்ரல் மாதம் தலைமைச் செயலகம் முன்பு ஓட்டேரி காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் கோதண்டபாணி சாலை மறியலில் ஈடுபட்டார்.

இது பெரும் பிரச்சனையாக மாறியது. இதையடுத்து தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு நான்கு மாதங்களுக்கு பிறகு தற்போது அவருடைய மகளுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்குவதாக குழந்தைகள் நல ஆணையம் அறிவித்தது.

ஆனால் தனக்கு மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்தது குறித்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை என்று அந்த விளக்கம்தான் தனக்கு வேண்டுமே தவிர மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் தேவையில்லை என்றும் கூறி, காமராஜர் சாலையில் டிஜிபி அலுவலகம் முன்பு நேற்று மகளுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தங்களை கருணை கொலை செய்யப் பரிந்துரை செய்யுமாறு அவர்கள் கோரிக்கை வைத்து கதறியது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில் தான் டிடிவி தினகரன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+