பெண்ணோடும் குடும்பம் நடத்திவிட்டு 'அல்வா'.. சென்னையில் சிறப்பு எஸ்ஐ டிஸ்மிஸ்
சென்னை:சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ஆண்ரூஸ் கால்டுவெல், ஒரு பெண்ணை திருமணம் செய்வதாக பழகி ஏமாற்றிய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் துறை ரீதியான விசாரணைக்கு பின்னர் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் பிறப்பித்துள்ளார்.
சென்னை பரங்கிமலையில் சிறப்பு உதவி ஆய்வாளராக (சிறப்பு எஸ்ஐ) பணிபுரிந்தவர் ஆண்ரூஸ் கால்டுவெல். இவர் 2021-ம் ஆண்டில் பெண் ஒருவரிடம் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாக தலையிட்டுள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகியுள்ளார்.

இதன்பின்னர் ஆண்ருஸ் மற்றும் அந்த பெண்ணும் தனியாக வீடு எடுத்து கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். பின்னர், ஆண்ரூஸ் கால்டுவெல் திருமணத்துக்கு மறுத்ததோடு, அப்பெண்ணை ஏற்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த அப்பெண், சிறப்பு எஸ்ஐ மீது 27.01.2022 அன்று பள்ளிக்கரணை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் விசாரணையும் நடத்தினர். இந்த விசாரணையில் ஆண்ரூஸ் கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.

இதையடுத்து,சிறப்பு எஸ்ஐ ஆண்ருஸ் மீது வழக்குப் பதியப்பட்டது. இந்நிலையில், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ரூஸ் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இதனால் அவரை போலீசார் கைது செய்யவிலை. அதேநேரம் காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு பெண்ணிடம் மோசடி செய்தது ஒழுங்கீனமாக கருதப்படுகிறது.
இதையடுத்து, துறை ரீதியிலான விசாரணை நடத்திய உயர் அதிகாரிகள் இதன் தொடர்ச்சியாக 02.06.2022 அன்று சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸ் தற்காலிக பணிநீக்கம் செய்தனர். அதன்பின்னர் நடைபெற்ற துறை ரீதியான விசாரணைகளுக்கு ஆஜராகாமலிருந்தார். மேலும், அவரது முன் ஜாமீன் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில், மோட்டார் வாகனப்பிரிவு துணை ஆணையர், சிறப்பு எஸ்ஐ ஆண்ரூஸை சஸ்பெண்ட் செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சென்னை பரங்கிமலையில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த ஆண்ரூஸ் கால்டுவெல்லை காவல் துறை பணியில் இருந்து நிரந்தர பணிநீக்கம் செய்து (Removal From Service) கமிஷ்னர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications