செத்து போ! சென்னை பரங்கிமலை ரயிலில் சத்யாவை தள்ளி விட்ட சதீஷ்! தூக்கு தண்டனை கேஸில் திடீர் திருப்பம்
சென்னை: சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தன்னுடைய தண்டனையை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் சதீஷ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23).

சதீஷ் - சத்யா காதல்
சதீஷூம், சத்யாவும் காதலித்து வந்ததாகவும், பிறகு சதீஷின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை விட்டு மெல்ல சத்யா பிரிய துவங்கியதாகவும் தெரிகிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாத சதீஷ், அவ்வப்போது சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஆனால் சத்யா காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 அக்டோபர் 13ம் தேதி கல்லூரிக்குச் செல்வதற்காக பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் வந்த சத்யபிரியாவை, தாம்பரம் சென்று கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார்.
பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன்
ரயில்வே ஸ்டேஷனிலேயே சத்யாவுக்கும் - சதீஷூக்கும் மோதல் வெடிக்க, மின்சார ரயில் வரும்போது, எட்டி உதைத்துள்ளார் சதீஷ்.. ரயில் கிட்ட வந்ததுமே, "செத்து போ" என்று சொல்லி கொண்டே சத்யாவை தள்ளி விட்டாராம். இதில் சத்யாவின் உடல் ரயிலில் மோதி துண்டு துண்டாக சிதறி விழுந்தது. தலைநகரில் அன்று நடந்த இந்த கொலையானது, தமிழகத்தையே உலுக்கி எடுத்தது.
அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து, சதீஷை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.. எனக்கு கிடைக்காத சத்யா யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக ரயில்முன்பு தள்ளி கொலை செய்தேன் என்று வாக்குமூலமும் தந்திருந்தார். இந்த கொலை வழக்கு விசாரணையானது, சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.. கைதான கொலையாளி சதீஷும் ஜாமீனுக்கு முயன்று தோற்றார்..
தூக்கு தண்டனை
சென்னை மகளிர் நீதிமன்றம் சதீஷுக்கு தூக்குத்தண்டனை விதித்து 2024-ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு சென்னை ஐகோர்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மரண தண்டனையை எதிர்த்து சதீஷ் அப்பீல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி சதிஷ் குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "காதலித்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீர் ஆத்திரத்தில் செய்த செயலே தவிர, இது ஒரு திட்டமிட்ட செயல் கிடையாது. மரண தண்டனை விதிக்க கூடிய அளவிற்கு அரிதினும் அரிதான வழக்கு அல்ல" என்று வாதிட்டார்.
திட்டமிட்டு கொலை
ஆனால், சிபிசிஐடி தரப்பில் ஆஜரான தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, "காதலித்தவர் வேறு ஒருவரை திருமணம் செய்ய ஒத்து கொண்ட வேதனையில் ஆத்திரத்தில் செய்ய கூடிய செயல் அல்ல திட்டமிட்ட செயல்.
2 நாட்களாகவே நோட்டமிட்டு 3வது நாள் ரயில் வரும் வரை காத்திருந்து ரயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன.. இது திடீர் தூண்டுதலோ உணர்ச்சி வசப்படுதலோ இல்லை அகங்காரம், பிடிவாதம் மற்றும் ஆணாதிக்க உணர்வில் நடந்த கொடூரமான திட்டமிட்ட செயல் என்பதால் மரண தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.
ஆயுள் தண்டனை தந்த கோர்ட்
இவ்வாறு அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதில் நீதிபதிகள், "கல்லூரி மாணவியை ரெயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளி சதீஷுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் 20 வருடங்களுக்கு தண்டனை குறைப்பு எதுவும் வழங்கக்கூடாது" என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications