சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து சர் சர்ரென பறந்த 20 விமானங்கள்.. குழப்பத்தில் மக்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தாம்பரம் விமான படை தளத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை பறந்ததால் மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது வெடிப்பொருள்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் பயங்கரவாதிகள் பலியாகினர்.

Chennai People gets panic after more than 20 jet aircrafts flew from Tambaram Airforce base

இதனால் பாகிஸ்தான் ஆத்திரம் அடைந்தது. இதையடுத்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமான படை விமானங்கள் ஊடுருவத் தொடங்கின. இவற்றை இந்திய விமானப் படையினர் சாதுர்யமாக விரட்டி அடித்தனர்.

வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானின் வான் வழித் தாக்குதலை எதிர்கொள்ள இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து போர் விமானங்கள் எல்லைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

அது போல் தாம்பரம் விமான படை தளத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று காலை பறந்ததால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் குழப்பமும் பீதியும் அடைந்தனர்.

English summary
Chennai People gets panic after 20 more air crafts flew towards from Tambaram Air force base
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X