சென்னையில் புதிய ரயில் பாதை.. ஈசிஆர், ஓஎம்ஆருக்கு வரப்பிரசாதம்.. பாண்டிச்சேரிக்கும் குட்நியூஸ்
சென்னை: சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை 179 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்க உள்ளது. இந்த சர்வே முடிந்த பின்னர் 1599 கோடி செலவில் திட்டம் அமைக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் இல் வசிப்பவர்கள் ரயில்கள் மூலம் செல்வது கனவாகவே இருந்து வருகிறது தற்போதைய நிலையில். பறக்கும் ரயிலில் ஏறி, சென்ட்ரல் வந்து தான் அதன்பிறகே சென்னையில் இருந்து வெளியூர் செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.
அதேநேரம் சென்னை- மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கடந்த 2007-ல் ரயில்வே ஒப்புதல் அளித்தது. ஆனால் அப்போதே நிலத்தின் மதிப்பு சென்னையில் எங்குமே இல்லாத அளவிற்கு உயர்ந்து இருந்தது. கடந்த 15 வருடத்தில் அந்த நிலத்தின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துவிட்டது.

தற்போதைய நிலையில் புதுச்சேரிக்கு விழுப்புரம் வழியாக ரயிலில் செல்ல 4 மணி நேரம் ஆகிறது. மகாபலிபுரத்திற்கு ரயில் வசதிகள் இல்லை. மகாபலிபுரம் வழியாக சென்றால் பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறையும்.இந்த திட்டம் மிகவும் லாபகரமாகவே ரயில்வேக்கு இருக்கும் என்ற போதிலும் ஏனோ பல காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை- மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த திட்டத்தில் சிறிய மாற்றம் செய்து, சென்னை பறக்கும் ரயில் நிலையம் உள்ள பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூருக்கு புதிய ரயில் பாதை அமைக்க ரயில்வே முடிவு செய்திருக்கிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, சென்னை பெருங்குடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் வலது பக்கமாகவே, இந்த ரயில் பாதை அமையும். இதுபோல, செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரத்துக்கு இணைப்பு ரயில் பாதை அமைக்கப்படும். பயணிகளுக்கான ரயில்கள் பெருங்குடி வழியாகவும், சரக்கு ரயில்கள் செங்கல்பட்டு வழியாகவும் இயக்கப்படும்.
இந்த திட்டத்துக்கான முதல்கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனத்தை தேர்வு செய்யும் வேலையை விரைவில் முடிக்க போகிறோம். நாங்கள் தேர்வு செய்யும் அந்நிறுவனம் 3 மாதங்களில் ஆய்வை முடித்து, ரயில்வேயிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்
சென்னை பெருங்குடியில் இருந்து மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் வரை இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1,599 கோடிசெலவாகும். திட்டத்துக்கான வழித்தட அமைப்பு,ரயில் நிலையங்கள் அமையும் இடங்கள், தேவையான இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஆய்வு அறிக்கையில் இடம்பெறும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பிறகு, படிப்படியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
ரயில்வே அதிகாரிகள் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் ரயில் பாதை அமைத்தால், ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலையில் உள்ள மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மகாபலிபுரம் போவதற்கும், புதுச்சேரி செல்வதற்கும் மக்கள் அதிக அளவில் இனி ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
மகாபலிபுரத்தையும் செங்கல்பட்டையும் ரயில் பாதையில் இணைப்பதால் நேரடியாக தென்மாவட்டங்களுக்கு இன்னொரு புதிய வழிப்பாதையும் கிடைக்கும், சென்னையில் தற்போது தாம்பரம் வழியாக மட்டுமே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. பெருங்குடி வழியாக செங்கல்பட்டை இணைந்ததால் புதிய ரயில் பாதையும் கிடைக்கும் . எனவே புதுச்சேரி, கடலூருக்கு மட்டுமின்றி, மகாபலிபுரம் செங்கல்பட்டு இணைப்பு சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரமாக இருக்கும்.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications