ரவுடிகளை கட்டுப்படுத்துவதே முதல் வேலை.. அவங்களுக்கு புரியும் மொழியில் ஆக்ஷன்.. சார்ஜ் எடுத்த அருண்!
சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையராக சார்ஜ் எடுத்துக்கொண்டார் அருண் ஐபிஎஸ். ரௌடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி என சென்னையின் புதிய காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை என அடுத்தடுத்து பரபர புகார்கள் எழுந்து வந்த நிலையில், காவல்துறையினருக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
1998 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அருண், பல மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதில் முக்கிய பங்காற்றியவர். கள்ள லாட்டரிச் சீட்டு ஒழிப்பிலும், கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதிலும் முத்திரை பதித்தவர். அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன ஐபிஎஸ் அதிகாரியான அருண் சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உடனடியாக இன்றே சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார் அருண் ஐபிஎஸ். 110-வது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை புதிய காவல் ஆணையர் அருண், "சென்னை மாநகரம் ஒன்றும் எனக்குப் புதிதல்ல. அண்ணா நகர், பரங்கிமலை, துணை ஆணையராக பணியாற்றியுள்ளேன். சென்னை போக்குவரத்து காவல்துறையிலும் பணியாற்றி உள்ளேன். சென்னையில் கொலைகள் குறைவாகவே நடந்துள்ளன. இதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்துவதே எனது முதன்மையான பணி. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முன்னுரிமை கொடுக்கப்படும். நடந்த குற்றங்களை கண்டுபிடிக்கவும், குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய சென்னை கமிஷனர் அருண், "சென்னை மாநகரில் உள்ள ரௌடிகள் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, போதைப்பொருள் தடுப்பு, சட்டம் ஒழுங்கு என அனைத்தையும் சரி செய்வேன். காவல்துறையில் இருக்கக்கூடிய கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றையும் கட்டுப்படுத்துவது எனது முன்னுரிமையாக இருக்கும்.
ரௌடிகள் ஒடுக்கப்படுவார்கள். ரௌடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியில் சொல்லிக்கொடுப்போம். என்னை நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த முதல்வரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications