சென்னைக்குள் வாகனங்களை எவ்வளவு வேகத்தில் ஓட்டலாம் .. கமிஷ்னர் வெளியிட போகும் முக்கிய அறிவிப்பு
சென்னை: 'வீரா' மீட்பு வாகனம் குறித்து ஒத்திகையை பார்த்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னைக்குள் வாகனங்களை எவ்வளவு வேகத்தில் ஓட்டலாம் என்பது குறித்து 10 நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.
சென்னை சாலை விபத்தில் சேதம் அடைந்த வாகனங்களில் சிக்குபவர்களை மீட்பதற்கான 'வீரா' என்ற வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் ஒத்திகை நிகழ்ச்சி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் , கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் முன்னிலையில் புதன்கிழமை நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உடன், கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் ஷரத்கர், ஆர்.சுதாகர், அஸ்ரா கார்க் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பேசுகையில், 'வீரா' வாகனத்தில் நவீன எந்திரங்கள் இருக்கின்றன. இவற்றை நமது தேசிய பேரிடர் மீட்பு படையினர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆகவே இந்த எந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி தேசிய பேரிடர் மீட்பு படையினரிடம் நமது காவலர்கள் பயிற்சி பெற்று வந்திருக்கிறார்கள்.
விபத்தில் சிக்குவோர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது பற்றி செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனம் இந்த பயிற்சியினை அளித்துள்ளது. விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளின் உயிரை முதலில் காப்பாற்றுவதுதான் முக்கியம். அதுவே எங்களின் நோக்கம்.
சென்னை ஐ.ஐ.டி.யில் நாளை (இன்று) நடைபெற உள்ள கருத்தரங்கில், ஐ.ஐ.டி., நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி டாக்டர்கள் கலந்து கொள்கிறார்கள். அந்த கருத்தரங்கில் என்ன மாதிரியான கூடுதலாக பயிற்சி அளிப்பது குறித்து முடிவு செய்ய உள்ளோம்.'வீரா' வாகன பணியில் 12 போலீசாரை ஒவ்வொரு 'ஷிப்டு'களிலும் 4 பேர் பணியில் இருக்கும் வகையில் 3 'ஷிப்டு' முறையில் பணியில் அமர்த்தி உள்ளோம்.
சென்னை நகருக்குள் வாகனங்களை எவ்வளவு வேகத்தில் இயக்க வேண்டும் என்பது பற்றி கூடுதல் கமிஷனர் (கபில்குமார் ஷரத்கர்) தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தங்களது பரிந்துரையை அறிக்கையாக அளித்துள்ளார்கள். இதனை நடைமுறைக்கு கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறோம். இன்னும் 10 நாட்களில் இது பற்றி முறையான அறிவிப்பு வெளியாகும்" இவ்வாறு கூறினார்.
@iitmadras 's Centre Of Excellence For Road Safety Hosts Road Safety Summit 2023. @CoERS_IITM
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) September 13, 2023
Several Senior Government officials took part including Tr. Shiv Das Meena, IAS, Chief Secretary to Government of Tamil Nadu, Tr. Sandeep Rai Rathore, @SandeepRRathore COP… pic.twitter.com/PU9ppkKA2q
சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆர்.சுதாகர் கூறும் போது, "வீரா வாகனத்தை சென்னை, தாம்பரம், ஆவடி ஆகிய மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனுப்பி வைப்போம்.. வருங்காலங்களில் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் இந்த வாகனத்தை அனுப்புவது பற்றி ஆலோசித்து வருகிறோம். ஒன்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நேரிடும் பட்சத்தில் எது பெரிய விபத்தோ, அங்கு இந்த வாகனத்தை அனுப்பி வைப்போம்.
கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 361 பேர் உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு இதுவரையில் 341 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை நகரில் மெட்ரோ ரெயில் பணி காரணமாக சில சிக்னல்களை நிறுத்தி வைத்திருந்தோம். அந்த சிக்னல்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications