வாகன ஓட்டிகளே ஹேப்பியா! சென்னை போக்குவரத்து போலீசாருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை போலீசார் அபராதம் விதிப்பதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டக்கூடாது என்றும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாரை சாலை சந்திப்புகளில் நிறுத்த வேண்டும், பீக் அவர் எனப்படும் காலை,மாலை நேரங்களில் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் மற்ற எந்த நகரங்களில் இல்லாத ஒன்றாக, போக்குவரத்து விதிமீறல் குறித்து போட்டோ எடுத்து அனுப்பினால், சிசிடிவியை கொண்டு ஆய்வு நடத்தி, அபராதம் விதிக்கிறது சென்னை போக்குவரத்து போலீஸ்.

சென்னையில் மிககடுமையான வாகன பெருக்கம் காரணமாக சாலைகள் நிரம்பி வழிகின்றன. சென்னையின் பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச்சாலைகள் தான். ஆனாலும் சென்னையில் போக்குவரத்து நெரிசல் கொஞ்சம் கூட குறைவில்லை. சென்னையில் உள்ள வாகன நெரிசல் காரணமாக பலர் ஒருவழிப்பாதையில் விதிகளை மீறி செல்வது அடிக்கடி நடக்கிறது.
அதேபோல் ஹெல்மெட் அணியாமல் கண்மூடித்தனமாக செல்வது, அரைபாடி லாரிகள் அபாயகரமாக வருவது, தண்ணீர் லாரிகளோ தண்ணீரை ஒழுகவிட்டபடி வேகமாக பாய்ந்து வருவது போன்றவை சர்வ சாதாரணமாக உள்ளது. இது ஒருபுறம் எனில், சாலைகளே தங்களுக்குத்தான் போட்டதுபோல் சிலர் யாருக்கும் வழி விடாமல் செல்வதும் இங்கு சாதாரணம். குறிப்பாக பேருந்துகளில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு வலது புறம் வழிவிடுவது மிக அபூர்வமாக நடக்கும். இடதுபுறமே ஏறி செல்ல வேண்டிய நிலை இருக்கும்.

சென்னையில் ஹெல்மெட் அணியாமல், சிக்னலை மதிக்காமல், செல்போனில் பேசிய படி, செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. விபத்து மற்றும் விபத்து உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்கவே இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது சென்னை போக்குவரத்து போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்கிறார்கள். குறிப்பாக மதுபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனஓட்டிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, சம்பந்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. அபராதம் செலுத்த தவறினால் அந்த வாகனம் ஏலம் விடப்படுகிறது.
இதுதவிர சீட்பெல்ட் அணியாமல் காரை இயக்குவது, வாகன ரேஸில் ஈடுபடுவது, வீலிங் செய்வது, பழுதடைந்த நம்பர் பிளேட் வாகனத்தில் பொருத்தி இருப்பது உட்பட அனைத்துவகையான போக்குவரத்து விதி மீறல்களுக்கும் உயர்த்தப்பட்ட அபராதத் தொகையே போக்குவரத்து போலீசார் வசூலிக்கிறார்கள்.
இதுபற்றி சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் கூறும் போதுட போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தி வருவதால் விபத்துகள், விபத்து உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக கூறினார்.

இதனிடையே போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைப்பதற்கான தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்த சென்னை போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டு வருகிறது. மேலும் தற்போது நடைமுறையில் உள்ள அபராதத் தொகை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார், அப்பிரிவு இணைஆணையர் மயில்வாகனன் ஆகியோரை நேற்று முன்தினம் தனது அறைக்கு அழைத்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
முடிவில் அபராதம் விதிப்பதற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டாமல் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீஸாரை சாலை சந்திப்புகளில் நிறுத்த வேண்டும் என்று சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார் பீக் அவர் எனப்படும் காலை,மாலை நேரங்களில் வாகன ஓட்டிகளை தொந்தரவு செய்யக் கூடாது என்றும் கண்காணிப்பு கேமரா உட்பட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விதிமீறல்வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்துஅதை வசூலிக்க வேண்டும் என்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை வழங்கி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications