திமுக கொடியுடன் சொகுசு கார்.. நம்பர் பிளேட்டை பாருங்க சார்... சென்னை போலீஸ் கொடுத்த அதிரடி பதில்
சென்னை: சென்னை போக்குவரத்து போலீசிடம் ட்விட்டரில் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திமுக கொடியுடன் கூடிய காரின் புகைப்படத்தை ஒருவர் அனுப்பி இருந்தார். அதற்கு சென்னை போலீஸ் கொடுத்த பதிலை பாருங்கள்.
சென்னை மாநகரம் மிகப்பெரியது. சுமார் சென்னை மாநகருக்குள் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். சென்னையின் புறநகர் பகுதிகளை எல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 2 கோடி பேர் வசிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் சென்னையில் மிக அதிகமான வாகனங்கள் செல்கின்றன.சில நிமிடங்கள் எங்காவது ஜாம் ஆனால் சென்னையில் பகுதிகளில் போக்குவரத் ஸ்தம்பித்துவிடும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது எளிதான காரியம்அல்ல. மிகவும் சவாலான காரியம்.
போக்குவரத்து விதிமீறல்களால் நெரிசல் ஏற்படுவதுடன், அவர்களால் விபத்தும் ஏற்படுகிறது. ஒரு வழிப்பாதையில் செல்வது, ஹெல்மெட் அணியாமல் செல்வது, வாகனத்தை அதிவேகத்தில் ஓட்டுவது, 3 பேர் ஒரே வாகனத்தில் செல்வது, அதிக பாரம்ஏற்றி கனரக வாகனங்களை ஓட்டுவது, புகையை கக்கியபடி வாகனங்களை ஓட்டுவது , இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது, நம்பர் பிளேட்டை தெளிவாக இல்லாமல் வாகனத்தை இயக்குவது, சிக்னல்களை மதிக்காமல் செல்வது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது போன்ற பல குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இவர்களை தேடி தேடி சென்று அபராதம் விதிப்பது இயலாத காரியம்.
இதனால் சென்னையின் முக்கியான பகுதிகளில் உள்ள சிக்னல்களில் கேமராக்களை பொறுத்தி போக்குவரத்தை கண்காணிப்பதுடன், விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு சென்னை போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
இந்த திமுக கட்சிகாரன் மட்டும் நம்பர் plate design design ஹா வைக்க முடியுது 🤧 @ChennaiTraffic pic.twitter.com/PHKDhSOZld
— CΔPTIΩΠ MILLΣR 🎭 (@MusicAd39440892) July 9, 2023
அத்துடன் பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும்வாகனங்களை போட்டோ எடுத்து நேரம், இடம், நாள் என்பதை குறிப்பிட்டு சென்னை மாநகர போலீஸை டேக் செய்தால், அவர்கள் சிசிடிவியை ஆய்வு செய்து குறிப்பிட்ட வாகனத்திற்கு அபராதம் விதிக்கிறார்கள். அந்த அபராதம் குறித்த சலான்.வாகன உரிமையாளரின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் ஆக சென்றுவிடும். இப்படி தினமும் ஏராளமானோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஒருவர் திமுக கொடியுடன் கூடிய காரின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அதில் இந்த திமுக கட்சிகாரர்கள் மட்டும் நம்பர் பிளேட்டை எப்படி டிசைன் டிசைன் ஆஹா வைக்க முடியுது என்று சென்னை போக்குவரத்து போலீசை டேக் செய்திருந்தார். அதற்கு உடனே பதில் அளித்த போலீசார், எந்த இடம், நேரம், நாள் ஆகியவற்றை அனுப்புமாறு கேட்டனர். அதற்கு அவர் இன்ஸ்டாகிராமில் எடுத்தேன். எப்போது எடுத்தது என தெரியவில்லை. எனினும் வாகனம் சேலத்தில் இருப்பதை அறிந்த போலீசார், சேலம் போலீசை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தனர்.












Click it and Unblock the Notifications