டாக்டர் கனவில் மிதப்பவர்களுக்கு குறி.. கொஞ்ச அசந்தாலும் மொத்தமா போயிடும்! சென்னை போலீஸ் வார்னிங்!
சென்னை: நீட் தேர்வில் குறைந்த தரவரிசை மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை தொடர்பு கொண்டு மருத்துவ படிப்பதற்கு கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக சென்னையில் மோசடி நடைபெறுவதாகவும், இதுபோன்ற இடைத்தரகர்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.

நீட் தேர்வு
நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் நீட் தேர்வை எழுதினர். மாணவர்கள் தங்கள் முடிவுகளை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://neet.nta.nic.in தெரிந்து கொண்டனர். மேலும், மாணவர்களுக்கு பதிவு செய்யப்பட்ட மின் அஞ்சலில் முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கு கடந்த ஜூன் மாதம் 6 ஆம் தேதியில் இருந்து ஜூன் 29 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
எம்பிபிஎஸ் படிப்பு
தொடர்ந்து எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு நிறைவு பெற்றிருக்கிறது . பிடிஎஸ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும் முடிந்திருக்கும் நிலையில் தற்போது சென்னையில் புதுவகை மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. அதாவது நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசையில் குறைந்த மதிப்பெண் பெற்றோர்களையும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையும் தொடர்பு கொள்ளும் இடைத்தரகர்கள் தமிழகத்தின் பிரபலமான தனியார் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான சீட்டு வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
போலி இடைத்தரகர்
இது தொடர்பாக காவல் நிலையங்களிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் மருத்துவ படிப்புக்கு கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக வரும் இடைத்தரகர்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவ சேர்க்கைக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
லட்சக்கணக்கில் மோசடி
இந்நிலையில், நாள்தோறும் சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து இடைத்தரகர்கள் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமாக உள்ளன.
சென்னை காவல்துறை
எனவே, மாணவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். அரசின் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்வதன் மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான இடத்தை ஆலோசனை செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications