சென்னையை சூழ்ந்த புகை மண்டலம்.. தீபாவளி பட்டாசுகளால் ஏற்பட்ட கரும்புகை.. வாகன ஓட்டிகள் கடும் சிரமம்
சென்னை: சென்னையில் தீபாவளி பட்டாசுகளால் கரும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
பொதுவாக தீபாவளி அன்றும் அதன் பின்பான நாட்களிலும் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். மோசமான வெடிகளை வெடிப்பதாலும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கும்.
முக்கியமாக பெரு நகரங்களில் காற்று மாசு பொதுவாக மோசமான நிலையை அடைவது வழக்கம். பெருநகரங்களில் அதிக அளவில் மக்கள் வசிப்பதால் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம்.

சென்னை
அந்த வகையில் சென்னையிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி பட்டாசுகளால் கரும் புகை மண்டலம் ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்து இரவு முழுக்க வெடி வெடிக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு மோசமான நிலையை அடைந்துள்ளது.

எவ்வளவு
சென்னையில் காற்று மாசு 89 ppb புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு பல இடங்களில் 105 ppb புள்ளிகளை தொட்டது. வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அளவு 108 ppb புள்ளிகளை நேற்று இரவு தொட்டது. சென்னையில் நேற்று இரவு 7-8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

மோசமான நிலை
அதே சமயம் சரவெடி பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் அதையும் மீறி சென்னையில் நேற்று இரவு முழுக்க பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. பல இடங்களில் சரவெடி பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால் காற்றின் தரம் மோசமானது. இதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

மக்கள் சிரமம்
காற்று மாசு காரணமாக சென்னையில் முதியவர்கள், குழந்தைகள் பலர் சுவாசிக்க கஷ்டப்பட்டனர். சாலை முழுக்க கரும் புகை சூழ்ந்ததால், இரவிலும், அதிகாலையிலும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோல் நேற்று இரவு பனியும் சேர்ந்து கொண்டதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த கரும்புகையால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை மட்டுமின்றி மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இதேபோல் காற்று மாசு அளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications