சென்னைவாசிகளே.. ரேஷன் கார்டில் பெயர் திருத்தணுமா? குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. தேதி பாருங்க
சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.. அந்தவகையில், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர்.

நலத்திட்டப்பணிகள்: அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன.
மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
முகாம்கள்: இந்த முகாம்கள் மூலம், ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் சென்னைவாசிகளுக்கு, நவம்பர் மாதத்துக்கான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கமாக, உணவு வழங்கல் துறை சார்பில், மண்டல உதவி கமிஷனர், வட்ட வழங்கல் அலுவலகங்களில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறைதீர் முகாம் நடத்தப்படும்..
தீபாவளி பண்டிகை: அந்தவகையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை, குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால், பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். அதனால், இந்த மாதத்திற்கான ரேஷன் குறைதீர் கூட்டம், வரும் 18ம் தேதி நடத்தப்பட உள்ளதாக, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில் உள்ளதாவது: "நவம்பர் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் 18.11.2023 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகள்: குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும்.
மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னையிலுள்ள 19 மண்டல அலுவலகப் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications