Chennai Ration Card: சென்னை மக்களே.. ரேஷன் கார்டு வேண்டுமா? இன்று 10 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
சென்னை: ரேஷன் கார்டு உள்ளிட்ட தேவைகளுக்காக பல இடங்களில் அலைய வேண்டாம் என்பதற்காக ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் திட்டத்தை 'உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்' என்கிற பெயரில் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று 10 வார்டுகளில் இந்த முகாம் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கேற்ற அரசு வழங்கும் பல்வேறு சேவைகளை பெற முடியும். குறிப்பாக ரேஷன் அட்டை, மகளிர் உரிமை தொகை ஆகியவற்றையும் பெற முடியும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 40 நாட்களில் தீர்வு எட்டப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெறும் முகாம் குறித்து சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "சென்னை மாநகராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (ஆக.20) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன. அதன்படி,
1. மணலி மண்டலம் 19-ஆவது வாா்டில் எம்.எம்.டி.ஏ. மாத்தூரில் உள்ள ராயல் பேலஸ்
2. மாதவரம் மண்டலம் 26-ஆவது வாா்டில் தனுவாஸ் மினி ஹால்
3. ராயபுரம் மண்டலம் 57-ஆவது வாா்டில் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி வளாகம்
4. திரு.வி.க.நகர் மண்டலம் 70-ஆவது வாா்டில் பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகம்
5. அம்பத்தூர் மண்டலம் 87-ஆவது வாா்டில் பாடி கம்பர் தெருவில் உள்ள அன்னை மண்டலம்
6. தேனாம்பேட்டை மண்டலம் 115-ஆவது வாா்டில் பிரச்ன்டேசன் ஆலய சமுதாயக் கூடம்
7. கோடம்பாக்கம் மண்டலம் 131-ஆவது வாா்டில் ஜி.ஆா்.டி.வாகன நிறுத்துமிடம்
8. வளசரவாக்கம் மண்டலம் 149-ஆவது வாா்டில் ராமகிருஷ்ணா நகர், கலைஞர் விளையாட்டு அரங்கம்
9. பெருங்குடி மண்டலம் 187-ஆவது வாா்டில் பாலய்யா கார்டன் ருக்மணி மஹால்
10. சோழிங்கநல்லூர் மண்டலம் 193-ஆவது வாா்டில் துரைப்பாக்கம்.எல்.மேத்தா கல்லூரி வளாகம்
ஆகிய பகுதிகளில் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்று மக்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" என்று கூறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் இந்த முகாம் மூலம் வழங்கப்படுகின்றன. மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டிருக்கின்றன. அரசு சேவைகளை பொதுமக்களுக்கு மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்ப்பதற்காக திட்ட முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.
"சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய" போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை:
இந்த துறையில், தொழில் வரிவிதிப்பு / புதிய தொழில் உரிமம் / புதுப்பித்தல் ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு அரையாண்டில் ஈட்டப்படும் மொத்த வருவாய்க்கான ஆவணம், ஊழியரின் விவரங்கள், ஊதியத்தின் விவரம் (நிறுவனம் எனில்) சொத்து வரி ரசீது, தொழில்வரி ரசீது, சொத்து ஆவணம்/வாடகை ஒப்பந்தப் பத்திரம், ஆதார் அட்டை, பான் கார்டு (நிறுவனம் எனில்) பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவை தேவை. குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்க சொத்து வரி ரசீது, ஆதார் அட்டை, வைப்பு தொகை ரசீது ஆகியவை தேவை.
இது தவிர பிறப்பு சான்று, இறப்பு சான்று, புதிய சொத்து / காலிமனை வரி விதிப்பு விண்ணப்பம், பாதாள சாக்கடை இணைப்பு, சொத்து வரி பெயர் மாற்றம், கட்டிட அனுமதி, தெருவோர வியாபாரிகள் அடையாள அட்டை ஆகியவற்றிக்கும் விண்ணப்பிக்கலாம்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை:
இந்த துறையில் குடிநீர் இணைப்பு, கட்டிட வரைபடம் அனுமதி, சொத்து வரி, சொத்து வரி பெயர் மாற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் சுய உதவிக்குழு கடன் ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை:
இந்த துறை அதிகாரிகளிடம், பட்டா மாறுதல் / பட்டா உட்பிரிவு / இணையவழி பட்டா / பட்டாவில் பெயர் மற்றும் பரப்பு திருத்தம் / நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சிறு/ குறு விவசாய சான்று, OBC சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ், காலதாமத பிறப்பு / இறப்பு பதிவு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை, திருமணமாகாத பெண்கள் உதவித்தொகை ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை - உழவர் நலத்துறை:
வேளாண் இடுபொருட்கள் (மானிய விலையில்), நுண்ணீர்ப்பாசனம் தொடர்பான கோரிக்கைகள், வேளாண் இயந்திரங்கள்/கருவிகள் மானியத்தில், இ-வாடகை சேவை ஆகியவற்றிக்கு விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் நலவாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல், உதவித்தொகை, ஓய்வூதியம், ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
-
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் மாற்றம்! 50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் PAN தேவையா? -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications