மரண அடி என்றால் அது இதுதான்.. மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை
Recommended Video

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை-சேலம் நடுவேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சாலை திட்டம் செயல்படவிருந்த 5 மாவட்ட விவசாயிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடி வருகிறார்கள்.

இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் அதிமுக அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். 8வழிச்சாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை தமிழக அரசு மதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
#SalemChennaiExpressWay விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரணஅடி கொடுத்திருக்கிறது!
— M.K.Stalin (@mkstalin) April 8, 2019
அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா?
தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? pic.twitter.com/dKDlrMHgwX
ட்விட்டரில் ஸ்டாலின் இதுகுறித்து கூறியுள்ளதாவது: சென்னை சேலம் எக்ஸ்பிரஸ் சாலை, விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரணஅடி கொடுத்திருக்கிறது! அதிமுக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்ற வாக்குறுதியை, வழக்கு போட்ட பாமக பெற்றுத்தருமா? தவறினால், அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுமா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications