சென்னை பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. கனமழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்று (நவம்பர் 4) ம் தேதி ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அக்டோபர் 29ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் இந்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை அதிகளவில் பெய்து வருகிறது.

சென்னையில் மழை
குறிப்பாக கடந்த மாதம் 30ம் தேதியில் இருந்து சென்னை மற்றும் சென்னையின் புறநகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த ஆண்டு சென்னையில் கால்வாய் புனரமைப்பு பணி நடந்த நிலையில் பெரும்பலான இடங்களில் மழைநீர் தானாகவே வடிந்தது. இருப்பினும் சில இடங்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டது.

இயல்பை விட அதிகம்
இந்த நிலையில் நேற்று மாலை வரை மழை பெரும்பகுதிகளில் மழை பெய்தது. இதனால் டூவீலர்களில் நிறுவனங்களில் சென்று வருபவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக இந்த மழை பல சாதனைகளை செய்தது. நவம்பர் 2ம் தேதி நிலவரப்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழை பதிவானது. மேலும் சென்னைக்கு நவம்பர் மாதம் பெய்ய வேண்டிய மொத்த மழை என்பது 350 மில்லி மீட்டராகும். ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் 300 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. இதனால் இந்த மாதம் வழக்கத்தை விட அதிகளவில் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

மாலையில் கொட்டிய கனமழை
இந்த நிலையில் இன்று காலை முதல் மாலை வரை சென்னையில் பல இடங்களில் மழை பெய்யவில்லை. சூரியன் மெல்ல எட்டிப்பார்த்தது. இந்நிலையில் தான் மாலையில் மீண்டும் கனமழை பெய்யத்தொடங்கியது. மாலை 5 மணி முதல் பல இடங்களில் மழை பெய்தது. சென்னை ராயப்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், கீழ்பாக்கம், அயனாவரம், கேகேநகர், வடபழனி, அண்ணாசாலை, பள்ளிக்கரணை, ஈசிஆர் ரோடு உள்பட பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த கனமழை இன்று இரவு பல இடங்களில் நீடிக்கும். இன்றுயும் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 4ம் தேதியான இன்று ஒருநாள் மட்டும் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமிர்தஜோதி அறிவிப்பு செய்துள்ளார்.

புதுச்சேரியில் 2 நாள் விடுமுறை
முன்னதாக கனமழையின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 4), நாளை (நவம்பர் 5) ஆகிய 2 தினங்கள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications