விஜய்-க்கு யோகம் தான்.. 2027ல் திறந்து வைக்கும் மெகா திட்டம்.. சென்னை தலைகீழாக மாறப்போகிறது!
சென்னை: முதல்வராக பதவியேற்றியிருக்கும் விஜய் அடுத்த சில வாரத்தில் பூந்தமல்லி முதல் வடபழனி மெட்ரோ பாதை திட்டத்தை திறந்து வைக்க உள்ள நிலையில், சென்னையில் அடையாளத்தையும், சரக்கு போக்குவரத்தையும் வேகப்படுத்தும் மெகா திட்டத்தை 2027ல் திறந்து வைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
சென்னை துறைமுகத்தை மதுரவாயலுடன் இணைக்கும் 20.9 கிலோமீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலைத் திட்டம் முழு வேகத்தில் நடைபெற்று வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் சென்னை துறைமுகத்தில் இருந்து நகரத்திற்கு வெளியே வரும் சரக்கு போக்குவரத்தின் நேரம் 60-70 சதவீதம் குறையும். இதேபோல் சென்னை நகரத்திற்குள்ளான போக்குவரத்து நெரிசலும் பாதியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) சென்னை துறைமுகத்தை மதுரவாயலுடன் இணைக்கும் இத்திட்டத்தை இரட்டை அடுக்கு அமைப்பாக மாற்றி, ரூ.3,500 கோடிக்கு மேல் செலவில் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் சரக்கு போக்குவரத்தையும் நகர போக்குவரத்தையும் தனித்தனியாகப் பிரித்து, போக்குவரத்து நெரிசலை பெரிய அளவில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரட்டை அடுக்கு வடிவமைப்பின் சிறப்பு
இந்தத் திட்டம் முதலில் 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2016-ல் நிறுத்தப்பட்டது. 2023-ல் தமிழக அரசு மற்றும் சென்னை துறைமுக டிரஸ்ட் கோரிக்கையின் பேரில் மீண்டும் தொடங்கப்பட்டது. முன்பு ஒரே பாலமாக இருந்த திட்டம் இப்போது இரட்டை அடுக்கு வடிவமைப்புக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் நகர போக்குவரத்து தனித்தனியாக இயங்க முடியும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.
சரக்கு போக்குவரத்துக்கு பிரத்யேக பாதை
இத்திட்டத்தின் மேல் அடுக்கு முழுவதும் சரக்கு போக்குவரத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் கேட்-10-க்கு நேரடியாக கனரக வாகனங்கள் மற்றும் கண்டைனர்கள் செல்லும் வகையில் இந்த மேலடுக்கு பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர போக்குவரத்துடன் எந்த இடையூறும் இல்லாமல் சரக்குகள் விரைவாக கொண்டு செல்ல முடியும். இது துறைமுகத்தின் செயல்திறனை பெரிதும் மேம்படுத்தும்.
நகர போக்குவரத்துக்கு 13 ரேப்
இரண்டு அடுக்கு மேம்பாலம் திட்டத்தில் கீழ் அடுக்கு முழுவதும் நகர போக்குவரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். மெரினா முதல் கோயம்பேசு வரையில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 13 முக்கிய இடங்களில் ரேம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர் டேங்க் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் இந்த ரேம்புகள் அமைக்கப்படும். இதனால் பொதுமக்களின் அன்றாட போக்குவரத்து மிகவும் சீராகும்.
சென்னை துறைமுகத்தின் எதிர்கால வளர்ச்சி
இந்த உயர்மட்ட சாலை திட்டம் முடிவடையும் போது சென்னை துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் தற்போதைய 53 மில்லியன் டன் (MTPA) அளவில் இருந்து 2047-ம் ஆண்டுக்குள் 200 மில்லியன் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 24 மணி நேரமும் தடையில்லாத நெடுஞ்சாலை இணைப்பு கிடைக்கும் காரணத்தால் தென்னிந்தியாவுக்கு முக்கியமான மற்றும் விருப்பமான போக்குவரத்து தளமாக இருக்கும். இது தமிழகத்தின் வர்த்தகத்தை வலுப்படுத்தும் மற்றும் துறைமுகத்தின் செயல்திறனை பெரிதும் அதிகரிக்கும்.
இந்த மாபெரும் 2027 நவம்பரில் இந்தத் திட்டம் நிறைவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் துவங்கி வைப்பார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications