சென்னைக்கு வெளியே போறீங்களா? வாகன ஓட்டிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம்.. போக்குவரத்தே மாற போகுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: காஞ்சிபுரத்திற்கு வெளியே ரூ. 35 கோடி மதிப்பீட்டில் புதிய புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மாநில நெடுஞ்சாலைத்துறை இறுதி செய்துள்ளது.

இந்த புதிய சாலை காரணமாக சென்னையின் தெற்கு புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த வாகன ஓட்டிகள் உத்திரமேரூரில் தற்போது நிலவும் கடுமையான டிராஃபிக்கை தவிர்க்கலாம். இதன் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் விரைவில் தங்கள் இடங்களுக்குச் செல்ல உதவும்.

Chennai southern suburbs can skip traffic at Uthiramerur to get new big bypass

புதிய 4-கிமீ பைபாஸ் சாலை, அப்பகுதியில் அமைந்துள்ள பல எஃகு, சிமென்ட் மற்றும் ஜவுளித் தொழில்களுக்கான அணுகலை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில் இந்த புதிய சாலையை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இங்கே போக்குவரத்தை ஆய்வு செய்த பின், இருவழிச்சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, ​​தினமும் சுமார் 7,000 வாகனங்கள் இந்த பாதையை பயன்படுத்துகின்றன. இதனால் அங்கே இருக்கும் ஒருவழி சாலை போதுமானதாக இல்லை.

ஓஎம்ஆர் சாலை: சென்னை ஓஎம்ஆர் சாலையை 6 வழி சாலையாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.

மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.

இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.

ஓஆர்ஆர் எனப்படும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+