வந்துருச்சு மெசேஜ்.. சென்னையின் சாலைகளில் இனி ஸ்பீடா போலாம்.. ரூ.810 கோடியாமே.. வேற லெவல் அறிவிப்பு
சென்னை: சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்ரவரி 15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் பெய்த புயல், மழை பெரும் பாதிப்பை தந்துவிட்டது.. இதனால், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டதுடன், சாலைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டன. இதையடுத்து, அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட உள்ளது.. மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளது.

அமைச்சர் நேரு: 4 நாட்களுக்கு முன்பு அமைச்சர் நேரு இதனை உறுதி செய்திருந்தார்.. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை அலுவலகத்தில் பொறியாளர்களுக்கு புதிய வாகனங்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கியிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அறிவித்திருந்தார்.
"சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளையும் சீரமைக்க மாநகராட்சி சார்பில் ரூ.810 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளதாகவும், அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படுவதுடன், பாதாள சாக்கடை பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும்" அமைச்சர் நேரு கூறியிருந்தார்.
உத்தரவு: இந்நிலையில், சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் சாலை பணி டெண்டரை பிப்ரவரி 15-க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் உள்ளதாவது: சென்னை மாநகராட்சியில் ரூ.250 கோடி, நகராட்சி நிர்வாக துறையில் ரூ.228 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி இயக்குநரகம் சார்பில் ரூ.38 கோடி என ரூ.500 கோடி அளவுக்கு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டரை பிப்ரவரி 15க்குள் வெளியிட நகராட்சி நிர்வாகத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெருத்த நம்பிக்கை: டெண்டரை குறிப்பிட்ட காலத்தில் வெளியிட்டு சேதமான சாலைகளை சீரமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், சாலைப்பணிகள் துரிதமாகும் என்று நம்பப்படுகிறது.. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications