இன்று சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் முழுமையாக ரத்து! மக்களே நோட் பண்ணுங்க
சென்னை: இன்றைய தினம் சிங்கப்பெருமாள் கோவில் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இயக்கப்படும் பல்வேறு மின்சார ரயில்களில் 12 மின்சார ரயில்களில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை பொது போக்குவரத்தில் புறநகர் ரயில்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் சென்னையில் பல லட்சம் பேர் புறநகர் ரயில்களை நம்பியே இருக்கிறார்கள். பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்குச் செல்வோர் எனப் பலரும் மின்சார ரயில்களை நம்பியே இருக்கிறார்கள்.

பராமரிப்புப் பணிகள்
இதற்கிடையே சிங்கப்பெருமாள் கோவில் பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால், சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் 12 மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்குச் செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயல் சேவையில் மாற்றம்
மேலும், இதன் காரணமாகப் பிற்பகல் வரை காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. மேலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 am, 10.40 am, 11.30 am, பகல் 12, பிற்பகல் 1.10 pm மணிக்கு இயங்கும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான அறிவிப்பு
சிங்கப்பெருமாள் கோவில் பணிமனையில் இன்று ஜூலை 11ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.. இதன் காரணமாக, சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.31am, 9.02am, 9.51am, 10.56am மணிக்குப் புறப்படும் புறநகர் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்குப் புறப்படும் புறநகர் மின்சார ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
As part of ongoing engineering works, Line Block/Power Block is permitted in #ChennaiEgmore-#Villupuram section at #SingaperumalKoil Yard on 11th July 2025.
— DRM Chennai (@DrmChennai) July 10, 2025
Passengers, kindly take note.#RailwayUpdate pic.twitter.com/ZLfBagdIAR
சிறப்பு ரயில்கள்
அதேநேரம் பயணிகளின் நலனுக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.13 மணிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னை கடற்கரைக்குக் காலை 10.46, 11, 11.20, பகல் 12.30 என 4 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதேபோல காலை 11.30 மணி, பகல் 1.10 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்புப் பணி காரணமாக இப்படி பல்வேறு மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகப் பயணிகள் தங்கள் பயணத்தைக் கவனமாகத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications