சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..சாரல் மழையில் கண் குளிர தரிசனம்
சென்னையில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சென்னை: பத்மாவதி தாயார் கோவில் குடமுழுக்கு தி.நகர் ஜி.என் செட்டி சாலையில் கோலாகலமாக நடைபெற்றது. குடமுழக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று காலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலையில் பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவருடைய குடும்பத்தினர் தானமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கிய இடத்தில் பத்மாவதி தாயார் கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.15 கோடி மதிப்பில் கட்டி உள்ளது. இந்த கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த கோவிலுக்கு தேவையான சிலைகள், திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார், துவாரபாலகர்களான வனமாலி, பலாஹினி சிலைகள், மூல விக்ரஹங்கள், கலசங்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மூலவர் பத்மாவதி தாயார் சிலை 3 நாட்கள் நெல் தானியத்திலும், தண்ணீரிலும், 2 ஆயிரம் லிட்டர் பாலிலும் அபிஷேகம் செய்யப்பட்டது.

பத்மாவதி தாயார் கோவில்
அதைத்தொடர்ந்து நேற்று காலையில் நான்கரை அடி உயரம், மூன்றரை அடி அகலத்திலான பத்மாவதி தாயார் சிலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்ட்டது. பத்மாவதி தாயார் கருவறையில் நிறுவப்பட்டதை தொடர்ந்து திருப்பதி கோவிலில் உள்ள ஆகம விதிப்படி அனைத்து சம்பிரதாயங்களும் பின்பற்றப்பட்டன. தொடர்ந்து காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை தாயாருக்கு பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டன. இன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை சதுசதனா அர்ச்சனை தாயாருக்கு நடைபெற்றது.

மகா கும்பாபிஷேகம்
இதனையடுத்து மீன லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 10 மணி முதல் 11 மணி வரை பத்மாவதி தாயார்-சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது. இந்த கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.

பொதுமக்கள் தரிசனம்
திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சீனிவாச பெருமாள் கோவிலை கட்டி உள்ளது. ஆனால் நாட்டிலேயே முதன் முறையாக ஆந்திர மாநிலத்தை விட்டு, பிற மாநிலமான தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் பத்மாவதி தாயாருக்கு தனி கோவிலை கட்டி உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 11 மணிக்கு பொதுமக்கள் பத்மாவதி தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், ரச சாதம், தயிர் சாதம், இனிப்பு பொங்கல், வெஜ் பிரியாணி ஆகிய உணவு வகைகள் 3 வேளையும் வழங்கப்படுகிறது.

திருப்பதி லட்டு பிரசாதம்
பக்தர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக கோவிலுக்கு எதிரே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் அன்னதானம் இடைவிடாமல் வழங்கப்படுகிறது. அத்துடன் பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. திருப்பதி கோயிலை போன்று அனைத்து பூஜைகளும் இங்கு தினசரி நடைபெறும். திருப்பதி தேவஸ்தானத்துக்கு என்று பிரத்யேக சிலை தயாரிப்பு கூடம் உள்ளது. அந்த கூடத்தில் இருந்துதான் சிலைகள் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னையில் பிரம்மாண்ட கோவில்
செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, சென்னையில் மிக விரைவில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கு நிரந்தர கோயில் கட்ட உள்ளோம். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் உள்ளது போன்றே கோயில் அமைக்கப்படும். புதிய வெங்கடேஸ்வரா கோயில் அமைப்பதற்கான நிலம் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கோயில்களை கட்டுவதற்கான கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். சாமி தரிசனம் செய்ய முடியாத, பட்டியல் இனத்தவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளிலும் கோயில்களை கட்ட முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்

11 மணி முதல் பக்தர்கள் தரிசனம்
பத்மாவதி தாயார் கோவிலில் இன்று காலை 11 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்து 11 மணிக்கு மேல் சாமி தரிசனம் செய்ய வருமாறு கேட்டுக் கொள்கிறோம். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதனால் சுலபமாக தரிசனம் செய்யலாம். சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, லட்டும் வழங்கப்படும். கோயில் கட்டவும், கும்பாபிஷேகத்திற்கும் அரசு பல்வேறு உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார். சென்னையில் பல பகுதிகளில் சாரல் மழை பெய்த நிலையிலும் ஏராளமானோர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications