தாம்பரத்தில் இப்படியா நடக்கணும்? சிக்கன் பிரியாணியுடன் வந்த தம்பி.. மறு நிமிஷமே அண்ணன் செய்த காரியம்
சென்னை: சென்னை தாம்பரத்தில் நடந்த சம்பவம் ஒன்று, சென்னையை உலுக்கி எடுத்து வருகிறது. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.
சென்னை அடுத்துள்ள தாம்பரத்தை சேர்ந்தவர் பாபு... இவர் குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பெயர் சந்தியா.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.

சைவ பிரியர்: இதில் மூத்த மகன் தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.. இவருக்கு 16 வயதாகிறது.. தாரிஸ் ஒரு தீவிர சைவ பிரியராம்.. அசைவ உணவுகளை சாப்பிடவே மாட்டாராம். இதற்காகவே வீட்டில் அசைவ உணவுகளை சமைப்பது கிடையாதாம்.
இந்த நிலையில் கடந்த 17ம் தேதி பக்ரீத் பண்டிகைக்காக, தாரிஸ் குடும்பத்தினருக்கு அருகிலிருந்த நண்பர்கள் பிரியாணி தந்திருக்கிறார்கள்.. இந்த மட்டன் பிரியாணியை தாரிசின் தம்பி கோகுல், வீட்டிலேயே வைத்து சாப்பிட்டுள்ளார்... இதைப்பார்த்ததும் அண்ணன் தாரிஸுக்கு கடும்கோபம் வந்துவிட்டது. இதுகுறித்து அண்ணன் தம்பியிடையே தகராறும் வெடித்துவிட்டது.
கோபம்: பிறகு ஆத்திரமடைந்த தாரிஸ், தன்னுடைய ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். கோபத்தில் வெளியில் வராமலேயே இருந்தார்.. குடும்பத்தினர் சமாதானம் செய்தும் அவர் கதவை பூட்டிக்கொண்டிருந்தார்.
ஆனால், மதியானம் உள்ளே போனவர், இரவு நேரமாகியும் வெளியே வரவேயில்லை.. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ரூமுக்குள் சென்று பார்த்தனர்.. அப்போதுதான் தாரிஸ் தூக்கில் தொங்கியபடியே கிடந்ததை பார்த்து அலறி துடித்தார்கள்.. உடனடியாக அவரை தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றார்கள்..
குரோம்பேட்டை: ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், தாரிஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொல்லிவிட்டார்கள்.. இதைக்கேட்டு தாரிஸின் குடும்பத்தினர் கதறி அழுத காட்சி காண்போரை கலங்கடித்துவிட்டது..
குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாரிசின் சடலம் அனுப்பி வைத்த தாம்பரம் போலீசார், இது தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகிறார்கள். வீட்டில் பிரியாணி சாப்பிட்டதில் ஏற்பட்ட தகராறில் இப்படி மரணம் வரை சென்றுவிட்டது தாம்பரத்தில் பெரும் சோகத்தை தந்துவிட்டது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications