சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறைந்து வரும் பாதிப்பு.. சென்னையில் டாஸ்மாக் திறப்பு எப்போது? வெளியான தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் கடந்த மே 7ம் தேதி திறக்கப்பட்டது. ஜூலை மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிறு அன்று மட்டும் விடுமுறை விடப்பட்டது. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை இயங்குகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மதுவிற்பனை 170 கோடிக்கு மேல் இருக்கிறது. மற்ற நாட்களில் 100 கோடி அளவில் இருக்கிறதாக கூறப்படுகிறது.

chennai Tasmac shops are likely to open from August 8 due: says sources

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் இயங்குகிறது. அரசுக்கு நிதி வருவாயை அதிகம் தரும் ஒரே துறையாக தற்போது டாஸ்மாக் திகழ்கிறது. இந்நிலையில் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதால் கடுமையான விதிமுறைகளுடன் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

கம்ப்யூட்டர் இன்ஜினியர்னா என்ன.. காய்கறி விற்றால் என்ன.. இதுல கவுரவம் எங்க வந்துச்சு.. சபாஷ் சாரதா! கம்ப்யூட்டர் இன்ஜினியர்னா என்ன.. காய்கறி விற்றால் என்ன.. இதுல கவுரவம் எங்க வந்துச்சு.. சபாஷ் சாரதா!

சென்னையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. சென்னையில் பாதிப்பு குறைவது குறித்து இன்னும் ஒரு வாரம் வரை பார்க்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதன்பிறகு கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சியிடமும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாதிப்பு எண்ணிக்கை குறைந்தால் ஆகஸ்ட் 8ம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கடைகளை திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாம்.

English summary
It has been reported that Tasmac shops are likely to open from August 8 due to the declining corona infection in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X